மெய்ம்முன்
உயிர்
201. நூ: ‘மெய்ம்மேல் உயிர்வந் தொன்று வதியல்பே.’
பொ :
மெய்யெழுத்தினை அடுத்து உயிர்வந்தால் இணைந்து விடுவது
இயல்பாம்.
உளமுயர்ந்தது; பாரெழுந்தது; கடலலை.
202. நூ: ‘தனிக்குறில் பின்மெய் உயிர்வரின் இரட்டும்’
நுதலுரை:
மேற்கூறியதற்கு ஒரு சிறப்புவிதி கூறுகிறது.
பொ:
தனிக்குறிலை அடுத்து நிற்கும் மெய்யிறுதி முன்உயிர் முதல்
வந்தால் அம்மெய் இரண்டாய் நிற்க
உயிரேறி முடியும்.
உள்ளொளி; கல்லெறிந்தான்; கண்ணசைவு. உயிர்மெய்யை, தாய்யை,
எண்ணெய்யை-என்பன பிழை.
203. நூ: தன்மை முன்னிலைப் பெயர்களில் வேற்றுமைத்
தன்மையால் குறுகிய தனிக்குறில் மெய்கள்
ஆறன் உருபின் முன்னும் குவ்வுருபு
ஏற முன்வரும் அகரத் தின்முனும்
இரட்டுதல் இன்றிநடக்கும்; மேல்விதியே.
பா : தன்மை முன்னிலை இடப்பெயர்களில் வேற்றுமைப் பொருளால்
முதற்குறுகிய பெயர்களில் தனிக்குறில்
அடுத்து நிற்கும் மெய்கள் - ஆறாம்
வேற்றுமை உருபு ஏறும்போதும், நான்காம் வேற்றுமை உருபாகிய
‘கு’உருபு
ஏறுங்கால் அதற்குறு சாரியையாய் முன்வரும் அகரம் பொருந்தும் போதும்
அக்குறில் சார் மெய்கள்
இரட்டாமல் இயல்பாய் நடக்கும். அதற்கு மேல்
விதியே(204) விதியாகக் கொள்க.
எனது, நினது, தனது; தமது, எமது, நமது, நுமது, உமது. எனக்கு-
முதலிய குவ்வுருபிற்குக் கொள்க.
தான், தாம் பொதுப்பெயரும் ஒரு தன்மைபற்றி அடக்கப்பட்டன.
204. நூ: உள்இல் மேலே குறில் முதல் ஐம்பால்
இறுதிகள் பொருந்தினும் இரட்டாவாகும்.
பொ: உள், இல் என்பனவற்றின்
மேல் குறில் முதலமைந்த ஐம்பால்
இறுதிநிலைகள் வந்து பொருந்தினாலும் அக்குறில்பின் மெய்கள்
இரட்டாவாகும்.
உளன், இலன், உளள், இலள், உளர், இலர், உளது, இலது, உள, இல.
|