துவ்விறுதி அகரச் சாரியை பெற்றது. ஆகும் என்ற மிகையான்
உள்ளன இல்லதுபோல் இரட்டலும் உண்டு
என்க.
நல்லன், வல்லன் என இவையொத்தன இரட்டவும் இவை இரட்டாமை
பற்றித் தனிக்கூறப்பட்டன.
மெய்ம்முன்னும், உயிர்முன்னும்-இடைமெலி
மெய்வரல்
205. நூ: இருவழிக் கண்ணும் இருபதீற் றின்முன்
வரும்வய ஞநம இடைமெலி இயல்பே.
பொ: அல்வழி வேற்றுமைவழி
என்னும் இருவழியிலும்,
மொழியிறுதியாகும் உயிரும் மெய்யுமாய இருபதெழுத்துகளின் முன்வருமொழி
முதலாக
இடையின வயக்களும், மெல்லின ஞநமக்களும்வரின் இயல்பே
யாம்.
சான்று தேர்க.
206. நூ: குறில்ய, தனிஐமுன் மெலிமிகும்; இயல்பிடை.
நுதலுரை:
மேலதற்கு ஒரு சிறப்பு விதி.
பொ:
இருவழியும் குறிலடுத்த யகரமெய் முன்னும், தனித்து உயிராயும்,
உயிர்மெய்யாயும் நிற்கும் ஐ முன்னும்
மெல்லினம் வரின் மிகும்.
இடையினம் வரின் இயல்பாகும்.
சா: |
செய்ந்நன்றி நெய்ம்மணம். |
பொய்வாழ்வு |
|
ஐந்நூறு: மைந்நின்ற கண்டத்தன். |
கையாழ். |
207. நூ: மெய்யுயிர் முன்னே மெய்வரு திறத்தில்
மெலியிடை ஒழிய வலிவரு வகையை
இருவழிக் கண்ணும் காணுதல் இனியே.
பொ:
உயிர்முன் உயிரும், மெய்ம்முன் உயிரும் வருவகை முன்கூறி
இங்குத் தொடங்கும் மெய், உயிர்முன் மெய்ம்முதல்
வரும் திறத்தில் -
மெய்யெனும் முப்பிரிவில் மெல்லினமும், இடையினமும் வந்து புணர்தல் கூறி
முடித்தமையின்
இனி மெய், உயிர்முன் வலிவரும் வகையை இருவழியிலும்
காணுதலே எஞ்சி இருப்பது.
விரி: இது புணரியல் வகையிடை நினைவுநூற்பா. முன்
உரையாசிரியர்கள் நுதல் பொருள்கூறுதல்
சுவடிக்காகலாம். அச்சு
நூல்களில் தலைப்பால் பிரித்தலின் இந்நினைவூட்டு
வேண்டாவெனினும்
தெளிவு பற்றியும் வல்லினப் புணர்ச்சியே
கருத்துட்கொளல் வேண்டிய விரிவுடையது என்பதை
விளக்கவும் கூறினாம்.
|