உயிர்முன்
வலிமெய்
208. நூ: இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன்
கசதப வரின்மிகும்; பெரும்பால் இருவழி
பொ: இருவழியிலும்
பெரும்பாலும் இயல்பாயும், விதியாயும் நின்ற
சொல்லிறுதி உயிர்முன் கசதப முதற்சொல் வரின்
மிகுமாம்.
விதியீறாவது: இயல்பாக உயிரீறு அல்லாத சொல் புணர்ச்சித் திரிபிற்காக
இறுதி குன்றி உயிரீறாக
நிற்பது.
எனக்கூறினான்-இயல்பீறு; மரப்பட்டை-விதியீறு, பலாப்பழம்,
அடித்தட்டை, வட்டக்கல்; மலைக்காற்று;
ஒற்றைக்கண்ணன்.
விரி:
நன்னூல் நூற்பாவைத் திரித்ததென்னெனின் இருவழி என்னும்
இன்றியமையாச்சொல் சேர்க்கவும்,
பெரும்பால் என்பதனினே ‘விதவாதன’
அடங்கவும் விளங்கத்திரித்தேம். பிறவிடத்தும் திரித்தல்
கருத்துத்தெளிவு பற்றியே என்க.
209. நூ: அகர ஈற்றுப் பெயரெச்சங்கள்
அஃறிணைப் பன்மை வலிவரின் இயல்பாம்.
பொ:
அகர இறுதியாய இறந்தகால, நிகழ்காலப் பெயரெச்சங்கள்
அஃறிணைப்பன்மை இவற்றின் பின்வரும்வலி
இயல்பு.
சா:
வந்த பையன்; வருகின்ற பையன்.
நல்ல பையன் என்ற பெயரெச்சச் சாயற் பெயரையும் மிகாமை கொள்க.
அஃறிணைப்பன்மை-முற்றும்,
பலவென் பெயரும். வந்தன குதிரைகள், பல
குதிரைகள்.
210. நூ: பலசில என்பன தம்முன் தாம்வரின்
முதல்’ல’ அகரம் கெடலும் திரிபும்
இயல்பாய் நிற்பின் இயல்பும் மிகலுமாம்.
பொ:
பலசில என்னும் சொற்கள் தம்முன்னே தாம் வந்தால் முன்
சொல்லின் இறுதி அகரம் நீங்க லகர
வொற்றாகவும், அது திரிந்து றகர
வொற்றாகவும் மாறலும், இயல்பாய் நிற்பின், இயல்பும்
மிகுதலும் ஆம்.
பல்பல; சில்சில; பற்பல; சிற்சில
பலபல; சிலசில; பலப்பல; சிலச்சில
விரி:
‘றவ்வாதல்’ என்னாது திரிபும் எனப் பொதுவிற் கூறியது
பிறசொல்லொடு புணருங்கால்-பன்மாண் கடும்பின்
(புறம்) என
|