னகரம் ஆதலின், னகர மாதல் மகரப் புணர்ச்சியில் அடங்குமெனில்
தனிச்சொல் விதியில் என்னாம்
என்றும் ஐயம் அகற்றல் வேண்டுவதன்றோ.
பல்கலைக்கழகம். பல்பழக்குவை (திருவிளை) இயல்பு.
211. நூ: பலபிற எல்லாம் உருபேற்குங்கால்
அற்றே சாரியை: மேலினும் ஆகும்.
பொ:
பல, பிற, எல்லாம் என்னும் சொற்கள் வேற்றுமைப்
பொருளடைந்து உருபேற்குங்காலத்து அற்றுச்
சாரியை வேண்டும்;
அதன்மேல் இன்னும் அடுக்கிவரும்.
சா:
பலவற்றை; பிறவற்றால்; எல்லாவற்றாலும் பலவற்றிற்கு;
பிறவற்றினது; எல்லாவற்றின்பாலும்.
212. நூ: “அத்தின் அகரம்அகரமுனை இல்லை”
பொ:
அத்துச் சாரியையின் முதலெழுத்தாகிய அகரம், அகர இறுதிச்
சொல்லிற் புணருங்கால் இல்லாது
போகும்.
மரத்திலை; செல்வத்துட் செல்வம்
மேல்விதிச்சார்பில் அத்தின்மேல்-இன் மரத்தினிலை எனக் கொள்க.
213. நூ: அஃறிணை எதிர்மறை வினைமுற்றிறுதிஆ
வலிவரின் இயல்பாம்; ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச் சத்(து)ஆ மிகும்;அவ்
வினையெச் சம்மேல் இயல்பாய் முடியும்.
பொ:
அஃறிணைப் பலவின்பால் வினைமுற்றொடு எதிர்மறை உணர்த்தி
இறுதியில் நிற்கும் ஆ, வலிவரின்
இயல்பாம். ஈறுகெடாது நிற்கும்போது
வலிமிகாத பெயரெச்சம் ஈறுகெட்டால் வலிமிகும். அஃது
ஈறுகெட்ட
எதிர்மறை வினையெச்சமாயின் வலிமிகாது முடியும்.
சா:
முற்று: ஓடா குதிரைகள்; பெ. எ. : ஓடாத குதிரைகள். ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்: ஓடாக்குதிரை:
ஓடாப் பூட்கை.
ஈ.கெ.எ.ம.வி.எ:
சென்றவிடத்தால் செலவிடா தீதொரீஇ(குறள்)
214. நூ: சுவைப்புளி, பூவழி வலிமெலி தோன்றும்
பொ:
சுவையைக் குறிக்கும் புளி, பூ இவற்றின் முன்வரும் வலி
மிகுந்தும் மெலிந்தும் தோன்றும்.
|