சா:
புளிச்சோறு; புளிஞ்சோறு பிற; பூக்கொடி; பூச்சோலை; பூத்தொடையல்; பூப்பந்து. பூங்கொடி; பூஞ்சோலை;
பூந்தொடையல், பூம்பந்து
215. நூ: ஏ, ஓ இடைச்சொல் பின்வலி இயல்பே.
பொ:
ஏ, ஓ இடைச்சொல் தமக்குரிய பொருளில் வரின் வலிமுன்
இயல்பாம்.
அவனாகவே தந்தான்; அவனுக்கோ கேட்டான். அவளே பார்த்தாள்; அவரோ செய்தார்.
‘ஓ’ திரிபாய ஆவும் இயல்பாம்-அதுவா கிடைக்கும்?
216. நூ: இரண்டுநான் குருபுகள் முன்வலி மிகுமே.
பொ:
இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை உருபுகள்
முன்வலிவரின் மிகும்.
மாந்தன் நிலவைக் கொண்டான்; மண்ணுக்குச் சுமை ஆனான்.
உருபு என்பது வேற்றுமை உருபைக் குறிக்கும் பெருவழக்குப்பற்றிப்
பொதுவிற்கூறப்பட்டது. உருபெனக்
கூறியவதனான், ஒன்னார்த்தெறலும்
(திருக்குறள்) என்றும், சோற்றுச் சுமை என்றும் இரண்டும் நாலும்
மறைந்தும்
வந்து வலிமிகுதலும் கொள்க.
கங்கை கொண்டான், மலை கிழவோனே என மறைந்து மிகாமை விதிவிலக்கு.
பொது
217. நூ: இருவழிக் கண்ணும் எழுவாய் ஏவல்
உயர்திணைப் பெயர்கள் வினைத்தொகை வியங்கோள்
விளிமுன் னிலைமுன் வலிவரின் இயல்பே.
பொ :
இருவழியிலும் எழுவாய், ஏவல், உயர்திணைப் பெயர்கள்
வினைத்தொகை, வியங்கோள், விளி இவற்றின்
மெய்யுயிர் இறுதிகள் முன்
வலிவந்தால் இயல்பாகும். பெரும்பால் உயிராதலான் முற்பொதுவில்
வைக்காமல்
உயிர் முறைமையில் வைத்தாம்.
தமக்கை கேட்டாள்: தீ படர்ந்தது (எழுவாய்).
போ, சிற்றூர்க்கு: விடு, காலை-(ஏவல்).
எழிலன் கை; தமிழரசி குழல் (உயர் பெயர்) கொல்களிறு; ஈட்டு புகழ்;
எரிசுடர் (வினைத்தொகை)
வெல்க பாவாணர்! வாழ்க பாவேந்தர்!
(வியங்கோள்) கடவுளே காப்பாற்று; பார்மக்காள் பகைவிலக்கீர்
(விளி)
நடவாய் கோவலா; வருவாய் கண்ணகி; (முன்னிலை).
|