விரி: எழுவாய் எனக் கூறியது,
பெரும்பாலும் பண்டை நூலுரையில்
அல்வழிக்கு ‘குறிது, நீட்சி’ என எழுவாய்த் தன்மையான சான்றுகளே
புணர்ச்சியைப் பெருகச் செய்தன. அதனை ஒன்றாயடக்கின் தெளிவாம்
என்று தனித்துரைத்தாம்,
அல்வழி இ, ஐ விதி போல்வனவும் பிறவும் இதன்கண் அடங்கும்.
உயர்திணைப் பெயர் எழுவாயில் அடங்குமெனின் இருவழிப்
புணர்ச்சிகூறலின் வேற்றுமைக்காகச் சேர்த்தாம்.
218. நூ: அஇஎ மூன்றடியாகத் தோன்றிய
ஒட்டிடைச் சொற்கள் வலிமுதற் சொல்வரின்
அவ்வவ் விறுதியான் மிகாமையும் மிகலுமாம்.
பொ:
அ, இ என்னும் சுட்டு, ‘எ’ என்னும் வினா இவற்றின் அடியாகத்
தோன்றி ஒட்டி நிற்கும் இடைச்
சொற்கள் வலிமுதற் சொல் வந்தால்
அவ்வவற்றின் இறுதி பற்றிச் சிலவிடத்துமிகாமலும், சிலவிடத்து
மிகுந்தும்
முடியும்.
மிகல்:
1.அப்படிச் சொன்னான்; இப்படித் தந்தான்; எப்படிக் கண்டான்;
2. அத்துணைத் தவமும் வீண்;
இத்துணைப் பெரிதா எத்துணைக் காலம் 3.
அத்தனைப் பழங்களும்தா இத்தனைத் தவறுகள்; எத்தனைத்தாள்.
மிகாமை:
4. அவ்வாறு சொல்க; இவ்வாறு செய்யாதே; எவ்வாறு
கிடைக்கும்; 5. அவ்வளவு சினமா இவ்வளவு பண்பு;
எவ்வளவு சுறுசுறுப்பு;
அன்று, அப்போது, அப்புறம் முதலியவற்றையும் இவ்வாறு காண்க. அங்கு,
இங்கு,
எங்கு-மென்றொடர்க் குற்றியலுகரம் வலி மிகுந்தும், மிகாதும் வரும்.
வலிவரின் என்பதை
முன் தெளிவு படுத்திய முறைமையால்
நூற்பாதோறும் கூறுவது, தனித்து நோக்கினும், நினையினும்
தெளிவுபடற்பொருட்டு.
உகர உயிரிறுதி
219. நூ: ஓடுஒடு அதுவெனும் உருபுகள் அதுஇது
சுட்டுகள் முன்னர் வலிவரின் இயல்பே.
பொ:
ஓடு, ஒடு, அது என்னும் வேற்றுமை உருபுகள் முன்னரும், அது
இது என்னும் ஒருமைச் சுட்டுகள் முன்னரும் வலி
இயல்பே.
சா:
அவளோடு சென்றேன்; சிறப்பொடு பூசனை செல்லாது. எனது
கை; என்னுடைய பை என்னும் ஏனைய ஆறன்
உருபு
|