பக்கம் எண் :
 

    மிகாமையும் ஈங்கே கொள்க.  மற்றது பெயரெச்சத்தின் இறுதியில்
அடங்குமேனும், காலங்காட்டாமையானும் ஆறன் இனமாகலானும் அடக்கிக்
கொள்க.  அவை முதலியன எழுவாயுள் அடங்கும்.  ‘எது’ பெரிதும்
தொடரிறுதியில் வருதலான் கூறலின்று; சிலவிடத்து முன் வருமேல் சுட்டுச்
சார்பாக அடக்கிக் கொள்க.  எது பெருமை?

220. நூ: பெரும் கரும் உயிர்வரின் பேர்கார் ஆகும்.

    பொ : பெரும், கரும் என்னும் பண்படைகள் உயிர் முதற் சொல் வந்து
புணரின் பேர், கார் என நீளும்.

    சா: பெரும் பேராசிரியர்; பேரறிஞர்; பெரும்புலவர்; காரா (பசு);
காரிருள்; கருங்குரங்கு.

    இவ்வொலியியைபானே-வரு+ஆ+து=வாராது என்றாம்: “ருவ்வொடு
ஆப்புணரின் வராது என்றாம்.

    மகர விறுதியாய்த் தோன்றினும் கரு, பெரு என்பனவே உண்மை உரு
ஆகலின் ஈண்டுக் கூறினாம்.

221. நூ: அதுஇது இரண்டும் உயிர்முதற் சொல்வரின்
       அஃதிஃ தென்றும் பிறவரின் இயல்புமாம்.

    பொ : அது இது என்னும் இரண்டும் உயிர்முதற்சொல் வந்தால் அஃது
 இஃது என்று தோன்றலும், பிறவந்தால் இயல்பும் ஆகும்.

    சா : அது பொத்தகம்: இது+ஏடு=இஃதேடு.
        
அது மேனி; அஃதுடம்பு பெற்றான் (திருக்குறள்)

    இவை ஒலியிணக்கம் நோக்கிய விதிகள்.

222. நூ: அது சாரியை அன்; அஃது சாரியை பெறா.

    பொ: வேற்றுமைப்பட்டு உருபேற்குங்கால் அது இது என்பனவற்றிற்கு
அன் சாரியை யாகும்.  அஃது இஃது என்பன சாரியை பெறா என்றவாறு.

    சா: அதனை; இதற்கு.  அத்தினை; அத்திற்கு என ஒற்றிரட்டித்து
இன்பெறல் கொள்க.  அதை என்பதுண்டேனும் அதுக்கு என்பது ஒதுக்க
வழக்கு.

223. நூ: அவை இவை உருபுற அற்றே சாரியை

    பொ: அவை, இவை என்பன வேற்றுமையில் உருபு வந்தடைய
‘அற்று’ச் சாரியையாம்.