பக்கம் எண் :
 

    சா : அவை + அற்று + ஐ = அவையற்றை; இவையற்றிற்கு
தொல்காப்பிய வழக்கு ஒப்பக்கூறப்பட்ட இவ்விதி அவர்
காலவழக்கின்மையின் விடுத்ததை இவ்விரு சொற்பயிற்சிக்குப்பின் ஏற்கலாம்
என்பது.

    அவைகளை, அதுகளை என்பன முழுப்பிழை.

224. நூ: சாரியை வருங்கால் இறுதி ஐ இன்றில.

    பொ: அற்றுச் சாரியை வருங்கால் மேற்கூறிய சொற்களின் இறுதி
உயிரான ஐ இக்கால வழக்கில் இலதாம் என்றவாறு.

    சா : அவை+அற்று+ஐ=அவற்றை;
         இவை+அற்று+கு=இவற்றுக்கு.

    இறுதி ஐ எனப் பொதுவிற் கூறியமையின் எவற்றின்கண் என
வினாவிறுதிக்கும் கொள்க.

    ‘இன்’ சாரியை மேற்படுவது ஒன்றும் பலவும் வரும் சாரியைப்
பண்பென்க.  உகர வரிசையில் சுட்டு முறைமை நோக்கி ஐயிறுதியும்
கூறப்பட்டன.  ‘அவ்’ முதலவே பலவின் இயல்பு வடிவமாகக் கொண்டு
புணர்த்தலும் ஒன்று.

குற்றியலுகரம்

225. நூ: உகர இறுதியில் ஒருவகையாக
        வல்லின மெய்ம்மேற் புல்லிய உகரம்
        மங்கொலி பெற்றுக் குற்றியலுகரமாம்.

    நுதலுரை: இந்நூற்பா உகர இறுதியில் ஒருவகையான
குற்றியலுகரத்தைப் புணர்ச்சிக்குப் பயனாகக் கூறுகிறது.

    பொ: உகர இறுதிச் சொற்களில் ஒருவகைப்பட்டன என்னுமாறு
வல்லின மெய்யெழுத்து மேல் இணைந்த உகரம் ஒரு சொல் இறுதியில்
வந்தால் அஃது ஒலி குன்றிக் குற்றியலுகரம் ஆகும்.

    மார்பு, சால்பு; எஃகு, அஃது; நஞ்சு, பண்பு; பங்கு, நச்சு, காற்று, பட்டு;
தோடு, நாடு; மாநாடு, கயிறு, வரகு.

    அஃதாவது பெரும்பாலும் கு, சு, டு, து, பு, று.  என்னும் ஆறு
எழுத்துகள் ஒரு சொல் இறுதியில் வரின் குற்றியலுகரமாம்.  பாடு, ‘கட்டு’
என ஏவலின் வருவன குன்றாதென்பர்.  சோப்பு, தராசு, வாசு என்னும்
பிறமொழிச் சொற்களை விலக்குக.

226. நூ: அவற்றின் ஈற்றயல் நிற்கும் வலிமெலி
        இடைமெய் தனிநெடில் ஆய்தம் உயிர்களான்
        அறுவகைப் படுத்தி அப்பெயர் தரும்நூல்.