227. நூ: ‘நெடிலுயிர்த் தொடர்குற்றுகரத்திறுதி
டறவொற் றிரட்டும், வேற்றுமை மிகுபால்.’
பொ :
நெடிலையும், உயிரையும் தொடர்ந்து வந்த குற்றியலுகரத்தில் ட
, ற இறுதி மெய் இரட்டிக்கும்-பெரும்பாலும்
வேற்றுமைப் புணர்ச்சிக்கண்; (சிறுபால் அல்வழியிலும் இரட்டும்.)
வேற்றுமை: |
ஆறு |
+ |
கரை |
= |
ஆற்றுக்கரை |
|
வீடு |
+ |
வேலை |
= |
வீட்டுவேலை |
|
வயிறு |
+ |
நோய் |
= |
வயிற்றுநோய் |
அல்வழி |
குருடு |
+ |
கிழவர் |
= |
குருட்டுக்கிழவர். |
|
காடு |
+ |
அரண் |
= |
காட்டரண் |
அல்வழி மிகாமை:- பாடுகிடந்தாட்கு (சிலம்பு); மாறுபடு சூரரை (திருப்புகழ்).
தமிழ் நாடு + அரசு = தமிழ்நாட்டரசு; அல்லது பிழை. திருட்டு என்பது இரட்டித்த போக்கில் நிலைத்தது.
228. நூ: வன்றொடர் முன்வலி இருவழிமிகுமே.
பொ:
வன்றொடர் குற்றுகரத்தின் முன் வலிமுதல் இருவழியும் மிகும்.
சா:
அல்வழி: சிறப்புத்தமிழ், பத்துத் தேங்காய்,
எடுத்துக்கொடுத்தான்.
வேற்றுமை: நச்சுப்பாம்பு, மரத்துக்கிளை, பலவற்றுப்பகை
குறிப்பு+கள்=என்பது இறுதிநிலை
இடைச்சொல் அல்வழிப்
புணர்ச்சியாய், குறிப்புகள் என்றாம். கருத்துக்கள் என்னுமிடத்துக்
கள்
தனிச்சொல் போலச் சேர்க்கப்படின் ஒற்றுமிக்கும் வரலாம். ஒற்று
மிகாமையே நன்று.
229. நூ: மென்றொடர் மெலிசில வலித்தலும் ஆமே.
பொ:
மென்றொடர் குற்றுகரத்தில் மெலிமெய் சிலவிடத்து வலித்துத்
திரிதலும் ஆகும்.
சா:
நிரப்பு, மருத்துவர், சிலப்பதிகாரம், ‘கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.’
(இதனான் பண்டைக்காலம், இற்றைநாள் என்பவற்றையும், தக்கவைத்துக்
கொண்டார் எனப்பிறவும்
அடக்குக.)
230. நூ: இரட்டிய இரண்டும் வலித்ததும் வன்றொடர்
பொ:
ஈற்றயல் ட, ற இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர் குற்றுகரங்கள்
இரண்டும் மேல்வலித்த மென்றொடரும்
வன்றொடர் போல் கருதிப் புணர்ச்சி
பெறும்.
நாட்டுப்பற்று, ஆற்றுக்கரை,
கற்றுக்குட்டி (கத்துக்குட்டி).
|