சா:
மூவாறு-பதினெட்டு; ஐயைந்து-இருபத்தைந்து; முப்பது, மும்முனை
முவ்வடை; ஐம்பது; ஐம்புலன்.
ஐம்மலர் என மெலி மிகுந்தது
பொதுவிதியின் (211) அடங்கும்.
தாமிரட்டித்தும் எனப்பன்மையிற் கூறியது மூவின மெய்களைக் குறித்தற்கு.
236. நூ: நான்கும் எட்டும் இறுதி கெட்டு
மேல் மெய் முறையே ல, ண ஆகும்.
பொ:
நான்கும், எட்டும் புணருங்கால் இறுதி உயிர்மெய் கெட்டுமேல்
நிற்கும் மெய் முறையே ல, ண வாகத்திரியும்.
சா:
நாலைந்து, நாலத்துஒன்று, எண்ணாறு, எண்சுவை நாற்பது,
நான்முகன், நானிலம் முதலியன பொதுவிதியால்
அமையும். நாலு, மூனு
என்னும் வழக்கு சிறப்புடைத்தன்று.
237. நூ: தொண்டே ஒன்ப தாகுதல் தொன்மை
மற்றது பத்து நூ றாயிரம் தம்மொடு
உற்றிடும் போதில்ஈ றழிந்து ணளவாய்
எட்டினைப் போல ஏற்றிடல் முறையே.
பொ:
தொண்டு என்னும் சொல்லே பழமையில் ஒன்பதைக்
குறிப்பதாகும். அது பத்து, நூறு, ஆயிரம் போன்ற
சொற்களோடு
சேரும்போது இறுதி உயிர்மெய் கெட்டு எட்டைப்போல் ஈற்றயல் மெய் ‘ண்’
‘ள’
வ்வாயும் மாறிப்புணர்தல் முறையாகும் (பரி3 - தொல்-செய்)
தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்.
தொள்ளாயிரம் எட்டினின்று வேறுபடல் உணர்க.
238. நூ: ஒன்பது என்பது தொண்பதன் திரிபே.
பொ:
ஒன்பது என்று இக்கால் வழங்கும் சொல் தொண்பது என்ற
சொல்லின் திரிபாகும்.
சா: |
எட்டு |
8 |
தொண்டு |
9 |
|
எண்பது |
80 |
தொண்பது |
90 (தொண்ணூறு) |
|
எண்ணூறு |
800 |
தொண்ணூறு |
900 (தொளாயிரம்) |
|
எண்ணாயிரம் |
8000 |
தொள்ளாயிரம் |
9000 (ஒன்பதாயிரம்) |
தொண்டு வழக்கழிந்ததும், தொண்பது முதல் மெய்கெட்டு டண்ணகரம்
றன்னகரமாய்த் திரிந்து மேலேறியது
காண்க.
நு:
‘ஒன்பதுஒன்று குறையும் பத்து’ என்றெல்லாம் அயல்மொழி
ஒப்பீட்டான் குழப்புவது பொருந்தாது என
மறுத்தது இது.
|