பக்கம் எண் :
 
34

34. நூ: வம்முன் நிற்கும் மகரம் ஒலிக்குறை.

 

பொ: மகரத்தின் பின்வரும் வகரம் இயைந்து நிற்பதேனும் அக்கால்
மகரத்திற்கு ஒலிக்குறையுண்டாம்.

 

    சா: வரும் + வழி = வரும்வழி  <  வருவழி;தரு (ம்) வளவன்.
 

35. நூ: சொல்லிடைப் படுமெழுத் திற்கே ஈண்டு
       சொல்லிய வரையறை எனினும் இரண்டு
       சொல்லிடைப் பாலும் கொள்ளும் தகைத்தே.

 

பொ: ஒரு சொல்லின் இடைப்படும் எழுத்துகட்கு இங்குக் கூறிய
வரையறை நோக்குடையதாயினும் இரண்டு சொற்கள் இணையும்
இடைப்பகுதியிலும் சொல்லத்தக்கதாகும் இஃது இவ் வரையறை ஒரு

சொல்லுள்ளோ இருசொல்லுள்ளோ என்று எழுந்த ஐயம் தீர்ப்பது.

 

புறனடை

 

36. நூ: எழுத்தைக் குறிப்பினும் அயன்மொழிப் பெயர்ச்சொல்
       வழுத்தும் பொழுதில் வாய்ப்பு நோக்கியும்
       கூறிய மூவகை மாறியும் வருமே.

 

    நுதலுரை: இது மூவிட எழுத்துகட்கு ஒரு புறனடை.

 

    பொ: சொல்லுக்கு முதலிலோ இடையிலோ இறுதியிலோ வாரா வென்று
விலக்கிய எழுத்துகள் அவற்றைத்தனித்துக் குறித்துரைக்கும் போதும்,
பிறமொழிப் பெயர்களை எடுத்துக் கூறும்போதில் ஒழிபியலில் கூறியாங்குப்
பதப்படாத பெயர்ச் சொற்களைச் சுட்டும் போதும் சொல் மூவிடவிதி சற்றே
மாறுபட வரலாம் என்பது.

 

    எழுத்தைக் குறிக்கும் போது இடந்தவறல் மேல் சொல்லிடை
நூற்பாக்களிற் காண்க.

 

    சா: ளணமுன்; லளடற போல்வன தற்குறிப்புத் தடுமாற்றம்.

 

கால்டுவெல்; கேப்டன் }
பெர்னாட்சா; அலெக்சாண்டர், என்பன அயற் சொற்
குப்தர்; அப்துல் வகாப்(பு) குறிப்புத் தடுமாற்றம்
இட்லர்; போப்(பு)  

 

வரியெழுத்து

 

37. நூ: பிராமிக் குறியாம் ஈமட் டகலக்
       கீவிசி றியைப்போல் இகரமேற் சுழியும்
       ஆய்தப்புள்ளி முச்சுழி பெறலுமாம்.

    பொ: பிராமி எழுத்தமைப்பினின்று பின்பற்றப்படுகின்ற ஈஎன்ற ஒரு
குறியீட்டை மட்டும் அகற்றி ‘கீ’ முதலிய எழுத்தின