பக்கம் எண் :
 
அல
அல்வழி: மெய்ச்சீர்த்தி; ஆர்க்காடு பாழ்ச்செய்கை பொய் போலும்மே; கூதிர்காலம்; வாழ்குடி.
வேற்றுமை: பேய்க்கதை, தேர்ப்படை, கூழ்ப்பானை.  வாய்பாடு-வாய்ப்பாடு என உறழும் புலவர் கல்லூரி, சூழ்தழல், வேய்க்குழல்.  வேய்ங்குழல் என மெலிதல் வழக்கற்றது.  பாழ்ங்கிணறு என்பது பாழுங்கிணறு என்பதன் செய்யும் செய்(ய்)ம் என்னும் வகை மாற்றமே.

245. நூ: ஆய்வினை யெச்சம் தோய்வலி மிகுமே.

    பொ: ஆய் என முடியும் வினையெச்சம் வலிவரின் திண்ணமாய் மிகும்.

    சா: ஒன்றாய்ச் சென்றோம்; அன்பாய்ச் சொன்னார்.

ல, ள

246. நூ: லளக்கள் வலிவரின் றடவாம்: மேவும்.
        மெலியால் னணவாம்: இடையியல் பிருவழி.

    பொ: இருவழியும் ல, ள முன் வலி வந்தால் முறையே றவ்வாயும், டவ்வாயும் மாறும்.  மெலி முதல் வந்தடைந்தால் முறையே னவ்வும், ணவ்வும் ஆகும்.  இடைமுதல் வந்தால் இயல்பாம்.

சா: வேற்றுமை: பற்பொடி, கட்குடி, நென்மூட்டை; முண்மரம், வில்வணக்கம், கள்விலக்கு.
  அல்வழி: சொற்செல்வம், முட்புதர்; வ(ர)ன்முறை,காண்முதல்; நல்வாழ்க்கை, கள்வேண்டாம்.

    குடி, விலக்கு - அரிவாள் வெட்டு என்பதுபோல் முதனிலைத் தொழிற் பெயர்கள்.

247. நூ: குறில் லள தவ்வரின் ஆய்தம் ஆகப்
        பெறுதல் அல்வழி: சில்வழிப் பழமை.

    பொ: குறிலடுத்த ல, ளக்கள் ‘த’ம் முதல்வரின் அல்வழியில் ஆய்தம் ஆகப்பெறும்.  அஃதும் பழமை எடுத்துக்காட்டில் சிறுபான்மையே.

    சா: கல்+தீது=கஃறீது.  கள்+தீது=கஃடீது.

    ஆகப்பெறுதல் என்றதனால் ஆதல் முன் விதிப்படி கற்றீது முட்டீது என்று கொள்க.

248. நூ: குறிலுறா ல, ள தவ்வரின் அதனோ
        டொன்றி ற, டவும்; நவ்வொடு னணவுமாம்
        இருவழி: வலிமுன் திரிதலும் இயல்புமாம்.