பக்கம் எண் :
 
பெ

 

    பொ: குறில் சார்ந்த ல, ள தம்முன் தகரம் வந்தால், அத்தகரத்தோடு
ஒன்றிக் கலந்து முறையே றவ்வாயும், டவ்வாயும், நகரம் வரின் அதனொடு
கலந்து முறையே னவ்வாயும், ணவ்வாயும் இருவழியும் மாறும்.  தனி
நெடிலோ, இரு குறிலோ, இரு நெடிலோ அடுத்துப் பிறவிறுதிகளாகும், ல, ள
முன் வலிவரின் திரிதலும் இயல்பும் ஆகும்.

    சா: கடறாவு படலம், காமவேடீயன், செவ்வேணல்லன்,
பழங்கால்+நத்தம்=பழங்கானத்தம்.

    இப்புணர்ச்சி முறை யொலியைப் பிறழ உணர்ந்து பழங்கா நத்தம்
என்பது பிழை.

        அல்வழி: நாட்கள்; ஆட்கள்.
        வேற்றுமை: வாட்பட்டடை; தோட்சுமை.

    வாள்கள், தோள்கள் இன்னும் வலிக்கும் வழக்குப் பெற்றில.  ஆயின்
இன்னும் சில்லாண்டில் வலிக்கும், ‘கால் பெரிது’ கெடுக்கும்.  சூல் கொடிது:
வேற்படை; பாற்பாகு (பாயசம்) குழல் போலும் கூற்றம் (குறள்) குடற்புண்
காய்ச்சல்; மரங்கள் பொலிந்தன; காலாட்படை.

    ‘தகரம் திரிந்தபின் கேடும், வருநத்திரிந்தபின் மாய்வும்’ என்று
நன்னூலார் நூற்றது-

    கற்றீது என்புழி லகரம் றகரமாகத் திரிதலன்றித் தகரம் தனித் திரிந்து
றகரமாயிற்றென எண்ணியே போலும்.  ஆயின் குறில் பின் ல, ள
ஒற்றிரட்டித்தல் போலத்தாம் திரிந்திரட்டித்தன வன்றித் தகரம்
திரிந்தபின்தாம் திரியா எனவே இவ்வாறுரைத்தாம்.  அவரும் (237) பின்
ஒப்பியுள்ளார்.

249. நூ: ழகரம் சிலகால் ளகரத் திறம்பெறும்.

    பொ: ழகர ஒலி சிலவிடத்து ளகரம் போல் ஒலித்துச் செய்கைகள் பெறும்.

    கீழ்த்திசை --> கீட்டிசை.  திகழ் + தசக்கரம் = திகடசக்கரம்
வாழ்+நன்=வாணன்.  மகிழ்+நன்=மகிணன். சோழநாடு = சோணாடு.

    இப்புணர்விலன்றித் தனிச்சொல் மாற்றமும் இங்குக் கொள்க. 
சிமிழ்த்தல்=சிமிட்டல்; கண்ணிடந்த (பெரி) போல்வன.  வீழ்த்தினான் =
வீட்டினான் (பாரதம்) துழாய் - துளசி எதிர்மாற்றம் இதுபோல்
வழங்கோசையால்தான் ழகரவொலி மக்களிடம் தெள்ளிதாதல் இலதுபோலும்.