பக்கம் எண் :
 
பு

    புழைக்கை-பூட்கை எனத்திரிதலும் இவ்வகையே.  ஓடாப்-பூட்கை
உரவோர் மருக. பூண்+கை-பூட்கை=மேற்கோள். அறத்தாறு நுவலும் பூட்கை
(புறம்).

புகல்-புகழ் என மாறல் சிறுபால்

(இசையொழிய: உரைப்பார் உரைப்பவை (குறள்) எனவே இசையும்
உரையுமாய்ப் பாராட்டுப் புகல்வதே புகழ்).

 

250. நூ: இன்மை இல்முன் வலிவரின் இயல்பும்
        ஆப்பெற் றடையின் மிகலும் ஆகும்.

    பொ: இன்மைப் பொருள்தரும் ‘இல்’ என்னும் சொல்முன்னே
வலிமுதல் வந்தால் இயல்பும், ஆவேறி வரின் மிகுதலும் ஆகும்.

    சா: இல் பொருள்; இல்கவின் புதுமை ஓவியம்; இல்லாக்காலன்,
இல்லாத்திறம் கொடிது.  ‘இல்’ இற்பொருள் எனத்திரியின்
மனைப்பொருளைக் குறிக்கும்.  இல்லை என்னும் வடிவு இக்கால் இடையில்
வருதல் (இல்லை தவறவர்க்காயினும் - குறள்) சிறுபாலும் மிகாது.

    இல் என்பதனால் அல்லும் ஆகும்.

    அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்; அல்லாக்கையன் முதல. 
இவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தன்மையனவாகலின் மிக்கன.

ன ண

251. நூ: ‘ண ன வல் லினம்வரட் டறவும் பிறவரின்
        இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு: அல்வழிக்கு
        அனைத்து மெய்வரினும் இயல்பாகும்மே.’

    பொ: வேற்றுமை வழியில் ண, னமுன் வல்லினம் வரின் ட,றவும் பிறமுதல்வரின் இயல்பும் ஆகும்.  அல்வழியில் எம்மெய்வரினும் இயல்பாகும்.

    சா: மண்யானை; பண்வாழ்வு; கவண்கல்; மீன்கறி; கட்கடை; பொற்பதக்கம்.

    பண்பாடினர், புண்பொதியுமாறு (பழமொழி) என மாறி வருவனவும் சிலவாம்.

252. நூ: குறிலணை னணமுன் நத்தான் னணவாம்
        குறிலடை வின்றேல் அவற்றோ டொன்றியாம்
        இருவழிக் கண்ணும்; தனித்தனி றடவாம்.

    பொ: இருவழியிலும் குறிலணைந்த ன,ணவுக்கு முன் நவ்வரின்

ன,ணவாகும், குறிலடுத்திலவேல் அவற்றோ டொன்றிக் கலந்து னணவாய்த்
திரியும்.  இரு நிலையிலும் தகரம் தனித்து றடவாகும்.