பக்கம் எண் :
 

    சா: பொன்னகை: மண்ணசை.  கூத்தானல்லூர், செம்மணிலம்.
 எண்டிசை, மண்டேய்த்த புகழினான்.  பண்டேய்த்த மொழியினாள். 
(சிலம்பு) பொற்றுகள், மட்டிரள் என்பன பொதுவிதியான் (254) அமையும். 
புன்னகை, எண்ணெய் முதல குறில்வழி ல,ள இரட்டித்தல் இங்கே அமைக்க.

253. நூ: லளவொடு நதக்கள் னணறட வாகும்.

    நு: ன, ண, ல, ளத் திரிபுகள் பற்றிய ஒலி யியைபு உணர்த்துகிறது.

    பொ: லவ்வொடும் ளவ்வொடும் நவ்வும் தவ்வும் சேர்ந்து ன,ணவாகவும்
றடவாகவும் மாறும்.

    சா: ல்+ந=ன    ல்+த=ற
        ள்+ந=ண   ள்+த=ட

    இதற்கு முன்னெடுத்துக் காட்டுகள் சாலும்.

    மற்று

    னண+த=றடவாம் என்று நன்னூல் கூறுவது ன,ண ஒலியுள் இருக்கும் ல,ள ஒலியானே.  த-அவற்றின் முன்றடவாதலை முன்னூற்பாக்களை நோக்கின் மொழியியல் நோக்கா இலக்கண முடிபெனவாம். இதனைக் கீழ்வரும் மீள்புணர்வால் உணரலாம்.

        ன்+ந=ன   ன்+த=ற
        ண்+ந=ண  ண்+த=ட

    தவ்விற்கு மேலிரண்டனுள் வேறுபாடு ன,ண முன் தகரம்தான் தனித்திரிதலும், ல,ளமுன் அவற்றையும் திரித்துத்தான் திரிதலும் என்க.  இவற்றைக் குறிலடுத்த புணர்ச்சியால் தெரியலாம்.

    விருந்தாளி-விருந்தாடி.  களவாளி - களவாணி ஒப்பு நோக்குக.

    ஒல்லும்-(ஒன்னும்) ஒண்ணும் (அறியொண்ணா-சுந்தரர்) இந்நூற்பாச் செய்தியை மனங்கொளின் பிழைத்திரிபு. ல, ள, ன, ண திரிபுப் புணர்ச்சியை ஒருவாறு பிரித்துணரலாம் ஆயின் இனித்தொடராக்க நிலையில் இன்றியமையாத் தொகைத் தொடர் இடங்களில் அன்றிப் பிறவிடத்துப் பிரித்தெழுதலாம். பால்க்கடல், கல்கண்டு போன்ற சொற்பிழைகள், முட்டாட் டாமரை, நாட்டாளிதழ், அட்டூணிடுழனி போலும் செறிவுப் புணர்ச்சி வலியுறுத்தலின் எதிர்விளைவே.

மகரவிறுதி

254. நூ: மவ்வுக்கத்தே வேற்றுமைச் சாரியை.

    பொ: மவ்விறுதிச் சொற்கள் பிற சொல்லொடு வேற்றுமைப் பொருளில் இணையும் கால் அத்துச் சாரியை பெறும்.

    சா: செல்வத்துள் செல்வம்.  மரத்துக்கிளை.

    இந்நூற்பா ‘அத்தின் அகரம் அகரமுனை இல்லை’ என்னும் நூற்பாப்பொருளோடு நோக்குடைத்து.