பக்கம் எண் :
 
255

255. நூ: ‘மவ்வீ றொற்றொழிந் துயரீறொப்ப’
        உயிருடன் படுமெய் வலிமிகல் உளவாம்.

 

    பொ: மகரவிறுதிச் சொல் சிலவிடத்து மகரம்கெடவிதியீறாய் உயிர்
இறுதி போல நின்று உயிர்வரின் உடன்படுமெய்யும், வலிவரின் மிகலும்
உளவாகும்.

 

    சா: மரவுரல், வட்டவிருக்கை, சட்டக்கலை, மருத்துவத் தொழில்,
மரச்செதிள், வட்டப்பலகை.

 

256. நூ: மவ்வே மெலிவரின் மறையும் இருவழி

 

    பொ: மகரஇறுதி மெலிமுதல் வந்தால் இருவழியும் மறையும்.

 

    சா: மனமாற்றம், அகநெகிழ்ச்சி, பெருஞாலம்.  அகநக நட்பது நட்பு,
மரமுறிந்தது, வருஞாயிறு.

 

257. நூ: மகரம் வலிமுன் மெலிவும் இடைவரின்
        இயல்பும் வம்முன் நலிவும் ஆகும்.

 

    பொ: மகரம் கெடாவிடத்து வலிமுன் அதற்கினமாய் மெலிந்து வரலும்,
இடைமுதல்வரின் இயல்பும் இடையினத்து வகரமுன் நலிந்து ஒலித்தலும்
உடைத்தாகும்.

 

    சா: வருங்காலம், மரஞ்செடி; செந்தாமரை.  வரு(ம்) வழி, தரு(ம்)
வளவன் முதலியன குறுகி ஒலிக்கும். இதனை மகரக் குறுக்கம் என்பர். 
இதனான் அம்+வயிறு=அவ்வயிறு (சங்க இலக்கியம்) என இலக்கியம்
புணர்க்கும்.  இக்குறுகொலி ஈரெழுத்தும் இதழ்ப் பிறப்புடைமையான்
அமையும்.  இனமாத்திரியுங்கால் பகரத்திற்கு இயல்பாதலும்
அத்தன்மையானே.  சிலவிடத்து யாமுன் இகரம் பெறுதல் முன் கூறினாம்.

 

258. நூ: அரசித் தமிழோ டுரசிக் கலந்த
        அயன்மொழி ஏதும் அருமைப் புணர்ச்சித்
        திறமுறல் இன்மையான் தமிழொலி சிதைந்த
        புணர்முறை பொதிந்த, இந்நாள் மிக்க
        புணர்வகை எல்லாம் பொருந்தக் கொளலே.

    பொ: அரசிபோலும் வீற்றிருக்கை வாய்ந்த தமிழ்ச் சொல்லொலியோடு
உராய்ந்து கலந்த அயன்மொழிச் சொற்கள் எவையும் அருமைப்பாடுடைய
இப்புணர்ச்சித் திறன்கள் பெற்றிருத்தல் இன்மையால் தமிழொலி சிதைந்த,
இயல்பாகவே புணர்முறைகள் குவிந்த இந்நாளில் புதிய
மொழித்தொடர்ப்போக்கால் மிகுந்துள்ள புணர்வகைகளை யெல்லாம்

பொருந்துமாறு அறிந்துகொள்க.