ஆங்கிலம் புணர்ப்பு முற்றுமின்மையும், வடமொழி அரைப் புணர்ச்சி
உண்மையும் பற்றிக் கூறினாம்
அருமை அரிதாதலையும் குறிக்கும். சிதைந்த,
பொதிந்த மிக்க-பெயரெச்ச அடுக்கு.
சில்பம் என வலி நிரம்பாமல் வரும் வடவொலியும்
Pudukottai
என வலி
குறைந்தியலும் ஆங்கில
வொலியும் உணர்க.
தமிழொலி சிதைதலாவது-
விறட்டி-றாட்டி, ராட்டி-அணுக்குண்டு, அணு-குண்டு.
புதிது+புதிசு+புதுஸ்; உயர்த்தி+ஒசத்தி+ஒஸ்தி ஆர்ப்பு+ஆட்டம்,
ஆர்ப்பாட்டம்-ஆர்பாட்டம்.
கண்ணராவி+கண்ராவி+கண்றாவி-
(கண்பொருமாடம்: உயர்காட்சி-புறம்) (இ)லம்பாடி - வேங்கடராமன்
-
வெங்கட்ராமன், இட்டளி + இட்டலி+இட்லி. திருவையார்(று) வெட்டார்(று).
இவைபோலும் இடை சேர்ந்திராத மெய்கலப் போசை தமிழ்ச்
சொல்லினே விளைந்தது. ‘ஒருமைப் பன்மை’
என்று
மிகவேண்டாதவிடத்துப் பவணந்தியாரும் மிகுத்துரை செய்யுமாறு ஆய சிக்கு
மிக்கதால்
புணர்முறை பொதிந்தது உணரலாம். பொதுவில்
புணர்ச்சியைப் பொருள்பற்றி இரண்டாக்கியதை
நோக்கின் வேற்றுமைப்
புணர்ச்சியில் இரண்டன் உருபும், நான்கன் உருபும் வலிமுன் மிகலும், ஏழன்
இடம் அத்துப்பெற்று மிகலும், ஒடு, ஓடு இயல்பாதலும் ஏனைய மூன்றன்
உருபும், ஐந்தன் உருபும், ஏழன்
உருபும் ல-ன புணர்ச்சிப் போக்குறுதலும்
ஆகும். அல்வழிப் புணர்ச்சியில் எழுவாய், விளி, முற்று,
பெயரெச்சம்
அடுக்கு இயல்பாகவும். இடை (உரி) பிற பெயர் வினை போல்
பொதுப்புணர்ச்சிபாற்படவும், எஞ்சிய வினையெச்சத்துள் எதிர்கால எச்சம்
(வரின் - வந்தால்)
ன, ல புணர்விலும், நிகழ்கால எச்சம் (செய) அகர
இறுதியாய் மிக்கு முடியவும், செய்து என்னும்
இறப்பெச்சம்
குற்றியலுகரத்திலும் அமையும்.
இனி புணர்ச்சி நெறி பற்றி நான்காகும். அவை -
அ) மெய்யிறுதி முன் உயிர் இயல்பாயும், குறிலடுத்து இரட்டித்தும் புணர்தல்.
ஆ) உயிரிறுதி முன் உயிர்(வ்,ய்) உடன்படு மெய்பெறல்.
இறுதி உகரம் அலக உயிர் ஏறுதல்.
இ) ல, ள, ன, ண - புணர்ச்சித் திரிபுகள்.
ஈ) வலிமிகுமிடம்; மிகாவிடம்.
இவற்றுள் ஈற்றினதே பெரிதும் அரிதும் ஆகும். அவற்றைப் பட்டியல்
முறையிலும் வல்லின றகர மெய்ப்பின்
வல்லொற்றெதுவும் மிகாது என்னும்
எளிய முடிபு போல்வன சில தனிச்சொற்கள் வழியும் உணர்த்துவனவற்றை
நோக்குக எனல் - ‘புணர்வகை பொருந்தக் கொளல்.’
|