அம்மையிற் குளிர்ந்தார், இறைவனடி அடைந்தார், இயற்கை எய்தினார்
என்பன. இல்லாமையை இருந்த
இடம் என்னும் ஒருசார் கடை வழக்கு.
இரவலர்க்கு உணவின்மையைக் குறிக்க மிஞ்சிப் போயிற்றென்றல்,
மங்கல
வழக்கு; எழுதல் என்பதை எழுந்தருளல் என்று அருள் என்பதை உயரிய
வினைத்துணையாக்கிய திருத்தொண்டர்
தொன்மை (பெரியபுராணம்)
வழக்கும் மங்கல வழக்கே.
குழுக்குறி:
கருப்பையா என்பவரை கானாரூனா என்னும் ஒரு
குலத்தார் உரையும், சிறையை மாமியார்வீடு என்னும்
தளைஞர் (கைதி)
மொழியும், சுவையின்மையை அறுப்பு (போர்-அலுப்பு) என்றும் கல்லூரி
மாணவர்
சொல்லாடலும் குழுக்குறியாம். வட்டார வழக்குகளில் மிக
வேறுபட்ட சொற்களும் குழுக்குறியே.
குழுக்குறி, பொதுவில் ஒரு
குழுவார்க்குள் வழங்கும் வழக்கு என்பதே. மறைத்துப் பேசும் வணிகம் முதலிய
துறைக் குறிகளும் அடங்கும்.
260. நூ: மறைத்துக் கூறும் உட்படை குறிப்பு.
பொ:
ஒன்றை மறைத்துக் கூறுகின்ற வெளிப்படையல்லாதன குறிப்பு மொழியாம்.
சா:
அஃதொன்றுதான் குறை, வாடாக்கரந்தை, (கரந்தைத் தமிழ்ச்சங்கம்)
என்பனவும், ஏற்றிறக்கச்சாலையை
நல்லசாலை என்பதும், அறிவில்
அகத்தியர் என்பதும் மக்கட் பொது வழக்கில் குறிப்பு. இன்னும்
கத கமி
கழ் என்னும் சிறுவர் மொழியும் குறிப்பில் அடங்கும். ‘இவ்வே’ - என்று
ஒளவை தொண்டை
மானைப் புகழ்வது போலப் பழித்தலும், ‘பாரி, பாரி’
என்று கபிலர் பழிப்பது போலப் புகழ்ந்ததும்;
நீயும் தவறிலை (கலி 56) எனச்
சிறியதைப் பெரிதாக்கலும், நான்மாடக்கூடல் (முத்தொள்) எனப்
பெரிதைச்
சிறிதாக்கலும் போலும் இலக்கிய வகையும் குறிப்பாம். மற்று மேற்கூறிய
தகுதி வழக்கினவற்றுள்
ஆகுபெயரும், அன்மொழித் தொகையும்
ஒருவாற்றான் குறிப்பாய் அடங்கும். அ. நா. உ.
(U.N.O) உ. ப. வி. சா.
(S.S.L.C)
போன்ற குறியீடுகளும், ‘அகர எனத் தொடங்கும் குறளும், பெறின்
என முடியும் குறளும் கூறு’ என்னும் வினாவும், ‘உயிர்த்திறல் ‘ப’
எல்லாவற்றிற்கும் வேண்டும்’ என்பது
போல் முதற் சாயலும் குறிப்பேயாம்.
புதையல்:
திருவேங்கடம் |
| |
முத்தமிழ், நால்வர், ஐம்பொறி, |
ஐந்தாம்படை |
அறுசுவை, ஏழிசை, எண் |
(மை), உண்கண் |
மெய்ப்பாடு எனும் தொகையும் |
இவையும் குறிப்பே. |
குறிப்பு. |
பல்சான்றீரே (195) என இழித்துரைத்ததும், பல்சான்றீரே (246) என
உயர்த்துரைத்ததும், நோயிலர்
ஆக நின்புதல்வர்; சிறக்க
|