பக்கம் எண் :
 

    நின்னாளே (புறம் 196) என மாறுணர்த்தலும் ஓம்பா ஈகை (110) கொடை
மடம் என வேறுணர்த்தலும் குறிப்பே.

வழுவகை

261. நூ: திணை பால் எண் இடம் காலம் மரபே
        எழுதுரை பொழிவில் வழுவின் வழுவே.

    பொ: எழுதும் உரையிலும் சொற்பொழிவு உரையிலும் திணை, பால்,
எண், இடம், காலம், மரபு என்னும் இவற்றை வழுப்படுத்தின் வழுவாம்
என்பது.

    எழுத்துரையிலும் பேச்சுரையிலும் நெடுந்தொடர் அமைப்பாலோ
சொன்மயக்கத்தாலோ எடுப்பு முடிப்பில் நேரும்; அவள் - வந்தது.  அவன்
வந்தாள்; நான் வந்தான்; நாளை வந்தேன்; ஆட்டுச் சாணம் எழுவாய்
பயனிலைகள் பிழையாம்.  நேற்றுப் போவோம் என்னும் மழலையும்
பிழையே.

262. நூ: வினாவிடை முதலா உரையா டலிலும்
        மிகுவழு அயற்சொல் வராமற் காத்தல்.

    பொ: வினாவிடை முதலிய பொது உரையாடல் முறையிலும்
மேற்கூறிய-பின்கூறும் வழுக்கள் மிக்கு வராமலும், அயற்சொல் மிக
வராமலும் காக்க.

    வி: ஈவினிங் மீட்பண்ணி, அப்படியே வாக்பண்ணிப்போய், ஹோட்டலில்
டிரிங் பண்ணிட்டு வந்தோம் என்பது போலும் அயற்சொல் எழுத்திலும்,
மேடையிலும் கட்டுப்படுத்திக் கொளப்படுதலின் மேல் நூற்பாலில் கூறாமல்
மிகுவழுச்சொல்லொடு ஈண்டுக் கூறினாம்.  தமிழ்ச் சொற்களஞ்சியத்தைக்
குறைத்து, பிழைத்தொடரை உருவாக்கல் பற்றி எழுந்த புதுக்கொள்கையான்
கூறப்பட்டது.  மிகுவழு வராமற் காக்க என்பதனால் சிறுவழுவரின்
அவற்றைச் சான்றோர் செய்யுள் நோக்கியும் அடிப்பட்ட வழக்கு நோக்கியும்
வழுவமைதியாகக் கொளல் வேண்டும் என்றவாறு, அவ்வழுவமைதிகள்
பின்னூற் பாக்களில் விதிக்கப்பெறும்.

    வினாவிடை என்று பண்டை நூல் கூறுவது பேச்சு வழக்காற்றைக் குறிக்கொண்டே.

வினா-விடை

263. நூ: வினாவும் விடையாம் விடைப்பொருள் தரினே.

    பொ: வினாவிற்கு எதிராக வினாவப் பெறுதல் விடைக்குரிய பொருள்
தந்தால் அதுவும் விடையேயாம்.