பக்கம் எண் :
 
சந

சந்தி

173.  நூ: இடைநிலை முதனிலை இணையும் சந்திப்
        பிடம் பட வருவதுசந்தி; அதுவே
        தவ்விற்குத் த,ந நிகழ்விற்குக் கவ்வே
        பவ்விற்குப் பகரம் என மூவகையே.

    பொ: இடைநிலை முதனிலையோடு இணையும் சந்திப்பிற்கு இடமாக
வருவது சந்தி; அது இறந்தகாலத்தில் சந்தி பெற்று நடக்கும் தவ்விடைநிலை
முன் தகரமாயும், நகரமாயும்; நிகழ்காலக் ககரமுதல் இடைநிலை
இரண்டற்குமுன் அவ்வொற்றாகவும்; எதிர்காலத்திடைநிலை
இரண்டிலொன்றாம் பகரத்தின் முன்பவ்வொற்றாயும் தோன்றுவதால் மூவகையாகும்.

    சா: படித்தான்; நடந்தான்; நடிக்கிறான்; நடிக்கின்றான்; படிப்பான். 
தகர இடைநிலை முன்னே ‘ந’கரம் வருவது த், ந், திரிபாக உரைப்பர்
பலரும்; ஆயின் பூந்தோட்டம் என்றும், பூத்தோட்டம் என்றும் புணர்தல்
உண்மையான் இயல்பாய்த் தோன்றிய சந்தியே என்க.  மடிந்தான்; மடித்தான்
என்றக்கால் நகர வொற்று வந்ததனைத் தகரமாக்கினால் பிறவினையாகப்
பொருள் வேறுபடுதலான் என்க.

    தகரவொற்றுத் திண்ணமாய்த் தோன்றுவதும், ககரமும், பகரமும்-
விழைகிறான், உண்பான் எனத் தவிர்ந்து வருதலும் உரையிற் கொள்க
மற்றிவை தவிர்தலும் வருதலும் புணரியல் செய்தியோடொத்தலின்
அப்பயிற்சியான் இது விளங்கும்.

திரிபு

174. நூ: ல,ள இறுதி முதனிலை இரண்டும்
       வலிமெய் இடைநிலை வந்துசொல்லாங்கால்
       றட என்றோ னண என்றோ
       மெய் பிறிதாகித் திரிதல் திரிபே.

    பொ: ல, ள என்னும் இறுதியையுடைய இரு முதனிலைகளும் வலிமுதல்
எழுத்துடைய இடை நிலைகள் மட்டில் வந்து புணர்ந்து சொல்லுருவம்
பெறுங்கால் ல,ள முறையே றட என்றோ ன, ண என்றோ மெய்ம்மாறித்
திரிவது திரிபு என்க.

சா: கல் + ற் + ஆன் = கற்றான் - ல் - ற்(விற்றான்)
  நில் + ற் + ஆன் = நின்றான் - ல் - ன்(நின்றான்)
விண்டான் = விள் + ட் + ஆன் - ள் -   ண்.(கொண்டான்)