வழு-அமைதி
திணை-பால்
269. நூ: திணைபால் ஐயம் வினாவோ(டு) உருஆர்:
பொ :
திணையிடத்தும், பாலிடத்தும் நிகழும் ஐயவெளிப்பாட்டுச
சொற்கள் வினாவும் சொல்லொடு அஃறிணையிடத்து
உரு என்பதும்
உயர்திணைப் பாலிடத்து ஆர் என்னும் இறுதியும் ஒட்டிவரும்.
சா:
அங்குத் தோன்றும் உரு கட்டையா? ஆளா?
அங்குத் தெரிவார் ஆணா? பெண்ணா?
வி: ஆர் என்பது இறுதிநிலை எனப் புலப்படக் கூறாதது யார் என்னும்
பொதுவினாவும் உள்ளதைக்
குறிக்க என்க.
அஃறிணைப்பால் ஐயம் இக்கொல்லையுட்புக்க மாடு ஒன்றோ?
பலவோ? என, எண்பகா அஃறிணைப் பெயராலும்.
குறுநொய் தின்ற கோழி சேவலா? பெட்டையா? என இருபாற்பொதுச்
சொல்லாலும் அடக்கப்படுதல்
பொதுவகையாதலின் ஈண்டுக்கூறப்பெறவில்லை.
270. நூ: அஃறிணைப் பொருளையும் அணிநயம் நோக்கி
உயர்திணை போலக் கருதும் இலக்கியம்.
பொ: அஃறிணைப் பொருள்களையும்,
அவலம், மகிழ்வு போலும்
மீதூர்ந்த உணர்வு வெளிப்பாட்டிற்கு உருவக நயத்தால் உயர்திணை போலக்
கருதிக் கூறுவதும் கேட்பதும் இலக்கியத்து நிகழும்.
சா:
“கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத்
தின்னும் அவர்காணலுற்று.”
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார்போல வருஞ்செல்லும் பேரும்
என் நெஞ்சு. (முத்தொள்ளாயிரம்).
இதனான் அஃறிணைக்குக் கூறப்படும் உயர்திணைத் தன்மையை
இலக்கண வகையான் வழுவமைதிப்படுத்துக என்பது.
இதிற்படுத்து சிலவழக்குகளையும் உணர்க. ஊசிக்கண் ஊசிக்காது;
பைக்காது: வாழைப்பூ நரம்பெடுத்தல்,
பலாப்பழக் கொப்பூழ் எடுத்தல்
போன்ற பெயர் ஒப்புகளும்; செருப்புக்கடித்தல், தூவல் கழிதல்
போலும்
வினையொப்புகளும்; மதியுமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம்மருள்மாலை
(சிலம்பு) தேன்வந்து
பாயுது காதினிலே (பாரதி) செவியினில் காட்சி தந்தாள்
(பாவேந்தன்) போலும் இலக்கிய வழக்கும்
அடங்கும்.
271. நூ: ‘திணைபால் பொருள்பல விரவினசிறப்பினும்
மிகவினும் இழிப்பினும் ஒருமுடிபின செயுள்.’
|