பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்10முத்துவீரியம்

நெடுமையின் மறுபெயர்கள்

11. நெடுமையுந் தீர்க்கமு நெட்டுயி ராகும்.

(இ-ள்.) நெடுமையெனினும் தீர்க்கமெனினும் நெட்டெழுத்தென்னும் ஒருபொருட்கிளவி.
(11)

மெய்யெழுத்து

12. ககரமுதன் மூவாறுங் காத்திர மாகும்.

(இ-ள்.) மெய்யெழுத்து க, ங, ச, ஞ, ட,ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ ழ, ள, ற, ன
ஆகிய பதினெட்டுமாமென்க. (12)

மெய்யின் மறுபெயர்கள்

13. ஊமையு மொற்று முடலெனப் படுமே.

(இ-ள்.) ஊமையெனினும், ஒற்றெனினும், மெய்யென்னும் ஒருபொருட்கிளவி. (13)

வல்லெழுத்து

14. அவற்றுள்
    வல்லெழுத் தென்மனார் கசட தபற.

(இ-ள்.) முற்கூறிய பதினெட்டு மெய்யினுள் க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும்
வல்லெழுத்தாகும். (14)

வன்மையின் மறுபெயர்கள்

15. வன்மைவன் கணம்வலி வல்லெழுத் தாகும்.

(இ-ள்.) வன்மையெனினும், வன்கணமெனினும், வலியெனினும், வல்லெழுத்தென்னும்
ஒருபொருட்கிளவி. (15)

மெல்லெழுத்து

16. மெல்லெழுத் தென்மனார் ஙஞண நமன.

(இ-ள்.) ங, ஞ, ண, ந, ம, ன ஆறும் மெல்லெழுத்தாமென்க, (16)