சொல்லதிகாரம் | 127 | முத்துவீரியம் |
உயர்திணை
468. ஆண்பெண் பலரென
முப்பாற் றுயர்திணை.1
(இ-ள்.) ஆண்பாலும்
பெண்பாலும் பலர்பாலும் என உயர்திணை மூன்றுபாலினை
யுடைத்தாம்.
(வ-று.) அவன், அவள், அவர்.
(11)
அஃறிணை
469. ஒன்றே பலவென்
றிருபாற் றஃறிணை.2
(இ-ள்.) ஒன்றன்பாலும்
பலவின்பாலுமென அஃறிணை இரண்டு பாலினையுடைத்தாம்.
(வ-று.) அது, அவை. (12)
பெயர் வினைகள்
இடவகையால் பொருள் உணருமாறு
470. படர்க்கைப்
பெயர்வினை முற்றிரு திணைபால்
அனைத்தும் பெறப்படு மல்லன விரண்டும்
ஒருமையும் பன்மையும் பெறுமென மொழிப.
(இ-ள்.) படர்க்கைப் பெயர்ச்சொல்லும்
படர்க்கைவினை முற்றுச்சொல்லும்
இருதிணையைம்பாலும் பெறும்; தன்மையும் முன்னிலையும் ஒருமையும் பன்மையும்
பெறும்.
(வ-று.) அவன், அவள், அவர்,
அது, அவை, படர்க்கைப் பெயர். நடந்தான்,
நடந்தாள், நடந்தார், நடந்தது,
படர்க்கைவினைமுற்று. நீ, நீர், முன்னிலைப்பெயர்,
யான்,
யாம், தன்மைப்பெயர். நடந்தாய், நடந்தீர், முன்னிலை வினைமுற்று. நடந்தேன்,
நடந்தேம்,
தன்மை வினைமுற்று.
(வி-ரை.)
‘படர்க்கை வினைமுற்று
நாமங் குறிப்பிற்
பெறப்படுந் திணைபா லனைத்து மேனை
இடத்தவற் றொருமைப்
பன்மைப் பாலே’ (நன் - பெயரி - 8)
என்ற நன்னூலைத் தழுவியது
இது. (13)
மூவிடம்
471. முன்னிலை தன்மை
படர்க்கைமூ விடனே.
1. நன் - சொல் - பெயரி - 5.
2. நன் - சொல் - பெயரி - 6.
|