சொல்லதிகாரம் | 213 | முத்துவீரியம் |
(வ-று.) மரை - தாமரை; ஓதி -
ஓந்தி; நீல் - நீலம். (120)
வேறுபடுக்கும் சொல்
763. 1 இடைச்சொல்
லெல்லாம் வேற்றுமைச் சொல்லே.
(இ-ள்.) பிறிதோர்
சொல்லை வேறுபடுப்பனவும், பிறிதோர் சொல்லான்
வேறுபடுக்கப்
படுவனவும் எனச் சொல் இரு வகைப்படும். பிறிதோர்சொல்லை
வேறுபடுத்தலாவது
விசேடித்தல்; பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது
விசேடிக்கப் படுதல்;
இடைச்சொல் லெல்லாம்
பிறிதோர்சொல்லை விசேடிக்கும் மொழியாமென்க.
(121)
இதுவுமது
764. 2 உரிச்சொன்
மருங்கினு முரியவை யுரிய.
(இ-ள்.) உரிச்சொற்கண்ணும் வேறுபடுக்குஞ்
சொல்லாதற்கு முரியனவுரியவாம்.
எல்லாம் ஆகாவாமெனவே உரிச்சொல்லுள் வேறுபடுத்தும்
வேறுபடுக்கப்பட்டும்
இருநிலைமையும் உடையவாய் வருவனவே பெரும்பான்மை
யென்பதாம்.
வேறுபடுக்குஞ்
சொல்லேயாவன - உறு, தவ, நனி; இரு நிலைமையு முடையன -
குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன;
உறுபொருள், தவப்பல,
நனிசெய்த்து என இவையொன்றனை
விசேடித்தல்லது வாராமையும், குருமணி விளங்கு,
குருகேழ்கிள ரகலம், செங்கேழ், செல்லனோய்,
அருஞ்செல்லல், இன்னற்குறிப்பு,
பேரின்னல் என இவை ஒன்றை விசேடித்தும் விசேடிக்கப்
பட்டும் இருநிலைமையு
முடையவாய் வருமாறும் காண்க. (122)
வினையெச்சம்
765. 2 வினையெஞ்சு
கிளவியும் வேறுபல் குறிய.
(இ-ள்.) மேற்கூறிய
வினையெச்சமும் வேறுபட்ட பல
இலக்கணத்தையுடையவாம்.
(வ-று.)
ஞாயிறுபட்டுவந்தான்; ஓடிவந்தான்.
1. தொல் - எச்ச - 56.
2. ,, ,, 60.
3. ,, ,, 61.
|