பொருளதிகாரம் | 253 | முத்துவீரியம் |
(வ-று.)
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
கஃதே குறைப்பவர்தம்
சீலத் தனகொங்கை தேற்றகி லேஞ்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் டேனசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை
சார்வதுவே. (திருக். 45)
(கு-ரை.) நுனிக் கொம்பிலிருந்து
அடிக் கொம்பை வெட்டுவார் செயல் போலக்
கொங்கைகளின் நிலையுள்ளன. ஆதலின் அவற்றிற்கு
இடையின் நுண்மை தெரிவித்தல்
பயனில்லை. அங்ஙனமிருக்க வண்டுகளே, நீரும் தேன் நசையால் கொண்டை
சாருவது
தக்கதன்று என்று கூறித் தலைவியின்
இடையின் நுண்மை விளக்கினன் தலைவன்.
இன்றியமையாமைகூறல்
என்பது, புணர்ச்சி யிறுதிக்கண்,
விசும்பும் நிலனும் ஒருங்கு பெறவரினும், இம்
முலைகளை மறந்து அதன்கண் முயலேனெனப்,
பிரிவுதோன்றத் தலைமகன்
இன்றியமையாமை
கூறல்.
(வ-று.)
நீங்கரும் பொற்கழற்
சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் புந்தொலைத் தென்னையும் ஆட்கொண்ட
கொங்கைகளே. (திருக். 46)
ஆயத்துய்த்தல்
என்பது, இன்றியமையாமை கூறிப்
பிரியலுற்றான், இனிப் பல சொல்லி யென்னை,
என்னுயிர் நினக்கடிமையாயிற்று, இனிச் சென்று
நின் னாயத்திடைச் சேர்வாயாக வெனத்,
தன்
பிரிவின்மை கூறித் தலைமகளை ஆயத் துய்த்தல்.
(வ-று.)
சூளா மணியும்பர்க்
காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயி ராரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னைதுன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே. (திருக். 47)
|