பொருளதிகாரம் | 260 | முத்துவீரியம் |
என்பது, ஐயுறுதல் அறிவுநாடல் இரண்டும்
இருவருமுள் வழி யவன்வர வுணர்தலாம்.
ஐயுறுதல்
என்பது, தலைமகன்
தழைகொண்டு நின்று, கரந்தமொழியால் தன்
கருத்தறிவிக்க,
மேனியொளியிலனாய், இப்புனத்தினின்றும் போகாது,
யானையோடு ஏனம் வினவி, இவ்வாறு
பொய் கூறிய இவன் யாவனோ வெனத், தோழி அவனை ஐயுற்றுக் கூறல்.
(வ-று.)
பல்லிலன் ஆகப் பகலைவென்
றோன்றில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லிலன் ஆகற்ற வாகட வானிச்
சுனைப்புனமே. (திருக். 60)
(கு-ரை.) பல் இலனாகப் பகலை வென்றோன்
- பற்கள் இல்லையாம் படி கதிரவனை
வென்றோன்.
அறிவுநாடல்
என்பது, இவன் யாவனோவென்று
ஐயப்படுகின்ற தோழி, பேராராய்ச்சியளாதலின்,
அவள் கூறிய வழியே நாடாது வந்து தங்களிடைக்கே
முடிதலின் இவர் சொல்லிருந்த
வாற்றான் ஆழமுடைத்தாய் இருந்ததென்று அவன் நினைவறிதல்.
(வ-று.)
ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை
அனங்கனைந்து
வீழமுன் னோக்கிய அம்பலத் தான்வெற்பி
னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னு மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே. (திருக். 61) (12)
இருவருமுள்வழி யவன்வரவுணர்தல் முற்றும்.
13. முன்னுறவுணர்தல்
841. வாட்டம் வினாதல் முன்னுற
வுணர்தல்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.
(திருக்கோவையார் உரை)
|