பக்கம் எண் :
 
பொருளதிகாரம்263முத்துவீரியம்

இருவர் நினைவு மொருவழி யுணர்தல்

என்பது, இருவர் நினைவுங் கண்டு இன்புறுதோழி, இவ்விடத்து இருவரும் வந்த
காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள் கண்ணாகிய வண்டு இன்பத்தேனைப் பருகி
யெழில்பெற வந்த இத் தன்மையல்லது பிறிதில்லையென, அவ்விருவர் நினைவுந்
துணிந்துணரா நிற்றல்.

(வ-று.)

மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மனம் மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத் தேனுண் டெழிறருமே. (திருக். 66) (14)

குறையுறவுணர்தல் முற்றும்.

15. நாண நாட்டம்

இனி முன்னர், நன்னிலை நாணமென்று கூறிய நாணநாட்ட மென்பது-இருவர்
நினைவும் ஐயமறத் துணிந்த தோழி, அவர் கூட்டமுண்மை யறிவது காரணமாகத்
தலைமகளை நாணநாடா நிற்றலாம்.

அதன் வகை

843. பிறைதொழு கென்றலும் பின்னு மவளை
     உறவென வேறு படுத்தி யுரைத்தலும்
     சுனையாடல் கூறி நகைத்தலும் ஆங்குப்
     புணர்ச்சி யியம்பலும் பொதுவெனக் கூறி
     மதியுடம் படுதலு மாகிய வைந்தும்
     நாண நாட்டம் நடுங்க நாட்டம்
     புலிமிசை வைத்துப் புகற லென்ப.

என்பது, பிறைதொழுகென்றல், வேறுபடுத்திக் கூறல், சுனையாடல்கூறி நகைத்தல்,
புணர்ச்சியுரைத்தல், மதியுடம் படுதல் ஐந்தும் நாண நாட்டமாம்; புலிமிசை வைத்துக்
கூறலொன்றும் நடுங்க நாட்டமாம்.