பொருளதிகாரம் | 373 | முத்துவீரியம் |
பின்பனி நினைந்திரங்கல்
என்பது, இப்பெரிய பனி
வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு
அவள் பொறுக்கும் அளவன்று, அவளைச்
சொல்லுகின்ற தென், எனக்கு
மாற்றுதலரிதென்பது
போதர, மிக்க தனிமையை உடையார்க்கு இப்பனி
வான் சரத்தைத்
தருமாயின், அதனோடு
ஒக்குமென்று, தலைமகன் தலைமகளது துயர்
நினைந்திரங்கா
நிற்றல்.
(வ-று.)
புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற்
றோன்றில்லைச் சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த வாபரந்
தெங்கும்வையம்
சரமன்றி வான்றரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே. (திருக். 321)
இளவேனில் கண்டின்னலெய்தல்
என்பது, மேலு மேலு நிறம்
பெற்றிருளாநின்ற இக்குயில்கள்,
மாம்பொழிலைச்
சுற்றும்வந்து பற்றின, இனி
உயிர் வாழுமாறொன்றுங் கண்டிலேனெனத்,
தலைமகள்
இளவேனில்கண் டின்னலெய்தல்.
(வ-று.)
வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம் மாம்பொழிற்றேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வாற்றொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பல மாதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே. (திருக். 322)
(கு-ரை.) கூழின் மலிமனம் -
உணவாற் செருக்கு மனம்போல. கோகிலம் - குயில்.
ஈண்டு இருள் என்றது உவமைக்கண் பண்பைக்
குறிக்கும். பொருளின்பால் நிறத்தைக்
குறிக்கும். ‘புறங்குன்றி கண்டனைய ரேனும்
அகங்குன்றி, மூக்கிற் கரியா ருடைத்து (277)
என்னும் திருக்குறளிலும் இங்ஙனம் வருதல்
காண்க.
பருவங்காட்டி வற்புறுத்தல்
என்பது, தலைமகன் தான்
வருதற்குக் குறித்துப் போகிய
கார்ப்பருவத்தின் வரவு
கண்டு கலங்கா நின்ற
தலைமகளுக்கு, இக்கார்வந்து வானிடத்துப்
பரந்தமையால், நம்மைக்
கலந்தவர்
|