பொருளதிகாரம் | 374 | முத்துவீரியம் |
தேர், இன்றாக நாளையாக இங்கே
வாரா நிற்பக் காணப்படுவதே இனியுள்ளதெனத்,
தோழி
அப்பருவந் தன்னையே காட்டி அவளை
வற்புறுத்தல்.
(வ-று.)
பூண்பதென் றேகொண்ட பாம்பன்
புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின் மலரும்
மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே. (திருக். 323)
பருவமன்றென்று கூறல்
என்பது, காரும் வந்தது, காந்தளு
மலரா நின்றன, காதலர் வாராதிருந்த
தென்னோவென்று கலங்கிய தலைமகளுக்கு,
சிற்றம்பலத்தின்கண்ணே குடமுழா முழங்க,
அதனை
யறியாது காரென்று கொண்டு, இக்காந்தள்
மலர்ந்தன, நீயிதனைப் பருவமென்று
கலங்காதொழியெனத், தலைமகன் வரவு
நீட்டித்தலால், தோழி அவள் கலக்கந்தீரப்
பருவத்தைப் பருவமன்றெனக் கூறல்.
(வ-று.)
தெளிதரற் காரெனச் சீரனம்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோனட
மாடக்கண் ணார்முழவம்
துளிதரற் காரென வார்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே. (திருக். 324)
மறுத்துக் கூறல்
என்பது, பருவமன்றென்ற
தோழிக்கு, காந்தளேயன்றி இதுவும்
பொய்யோவெனத்,
தோன்றியின் மலரைக்
காட்டி, இது பருவமேயென்று, அவளோடு தலைமகள்
மறுத்துக்
கூறல்.
(வ-று.)
தேன்றிக் கிலங்கு கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண்
டோட்கொண்டற் கண்டன் குழையெழினாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.
(திருக். 325)
|