பக்கம் எண் :
 
பொருளதிகாரம்375முத்துவீரியம்

தேர்வரவு கூறல்

என்பது, மறுத்துக் கூறின தலைமகளுக்குக், கொண்டல்க ளெட்டுத்திசைக்கண்ணும்
வாரா நின்றமையின், இது பருவமே, இனி உடன்ற மன்னர் தம்முட் பொருந்துதலால்,
நம்மைக் கலந்தவர்தேர், நம்மில்லின்கண் இன்று வந்து தோன்றுமென்று, அவள்
கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர் வரவு கூறல்.

(வ-று.)

திருமால் அறியாச் செறிகழற் றில்லைச்சிற் றம்பலத்தெம்
கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கணல் லாயின்று தோன்றுநம் பொன்னகர்க்கே. 
                                                          (திருக். 326)

வினைமுற்றி நினைதல்

என்பது, வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன், வினைமுற்றிய பின்னர், கயலையும்
வில்லையும் கொண்டு, மன்கோபமுங் காட்டி, ஒரு திருமுகம் வாரா நின்றது, இனிக் கடிது
போதுமெனத், தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகநினைந்து கூறல்.

(வ-று.)

புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவரும்
செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே. (திருக். 327)

நிலைமை நினைந்து கூறல்

என்பது, வினைமுற்றிய பின்னர், அவள் முகங்கண்டு வாரா நின்றவன், புறாக்கள் தம்
துணையோடு துயின்று முன்றிற்கண் விளையாடுவ கண்டு, இது நமக்கரிதாயிற்றென்று,
என்னிலைமை நினைந்தாற்றகில்லா ளாவள், நீ விரையத்தேரைச் செலுத்துவாயாக வெனத்,
தலைமகளது நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறல்.

(வ-று.)

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக தேர்பிறங் கும்மொளியார்