பக்கம் எண் :
 
பொருளதிகாரம்376முத்துவீரியம்

நிறப்பொற் புரிசை மறுகினிற் றுன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை தேரும் எழினகர்க்கே. (திருக். 328)

முகிலொடு கூறல்

என்பது, காரோட்டங்கண்ட பாகன், அதனோடு விரையத்தேரோட்டா நிற்பான்,
பிரிதலால் திருந்திய வழகெல்லாமழிந்து துன்புறா நின்றவளது சீரிய நகரின்கண்
வாராநின்ற எனது தேரின் முற்பட்டுச் சென்றியங்கா தொழியவேண்டும், இயங்கினும்,
அத்தமியாள் கேட்ப முழங்கா தொழிய வேண்டுமெனத், தலைமகன் முந்துறச் செல்லா
நின்ற முகிலொடு கூறல்.

(வ-று.)

அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. (திருக். 329)

வரவெடுத்துரைத்தல்

என்பது, தலைமகன் முகிலொடு வாரா நிற்பக் கண்ட தோழி, வணங்குவாராக
உடம்பட்டவர் கொடுத்த திறையையும், வணங்காது மாறுபட்டவ ரடையாளங்களையும் தமது
தேருக்கு முன்னாகக்கொண்டு, வீரமுரசார்ப்ப, ஆலியா நின்ற மாவினோடும் வந்தணுகினார்,
இனி நமக்கொரு குறையில்லையெனத், தலைமகளுக்கு அவன் வரவெடுத்துக் கூறல்.

(வ-று.)

பணிவார் குழையெழி லோன்றில்லைச் சிற்றம் பலமனைய
மணிவார் குழன்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டுவண்டேர்
அணிவார் முரசினொ டாலிக்கு மாவோ டணுகினரே. (திருக். 330)

மறவாமை கூறல்

என்பது, வினைமுற்றி வந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன்,
நீயிர் வினையிடத்தெம்மை மறந்தீரே யென்ற