பொருளதிகாரம் | 377 | முத்துவீரியம் |
தோழிக்கு, யான் பாசறைக்கட்
டாழ்த்தவிடத்தும், கண்முத்திலங்க நின்றிவ
ளென்னுடைய
நெஞ்சைவிட்டு நீங்கிற்றில
ளாதலால், யான் மறக்குமாறென்னோவெனத்,
தானவளை
மறவாமை கூறல்.
(வ-று.)
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங்
கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலணின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண ராதவன்
றில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய
வைகலுமே. (திருக். 331) (7)
வேந்தற் குற்றுழிப்பிரிவு
முற்றும்.
30.
பொருள்வயிற்பிரிவு
என்பது, குரவர்களாற்
படைக்கப்பட்ட பொருள்கொண்டு இல்லறஞ்
செய்தால்,
அதனால் வரும்பயன் அவர்க்காமத்
துணையல்லது தமக்காகாமையால், தமது
பொருள்கொண் டில்லறஞ் செய்தற்குப் பொருள்
தேடப் பிரியா நிற்றல்.
அதன் வகை
860. வாட்டங் கூறலும் பிரிவுநினை
வுரைத்தலு
மாற்றாது புலம்பலு மாற்றாமை கூறலுந்
திணைபெயர்த் துரைத்தலும்
பொருத்தமறிந் துரைத்தலும்
பிரிந்தமை கூறலும் பிரிவாற்
றாமையான்
இரவுறு துயரத்திற் கிரங்கி
யுரைத்தலும்
இகழ்ச்சிநினைந் தழிதலு
முருவுவெளிப் படுதலும்
நெஞ்சொடு நோதலும் நெஞ்சொடு
புலத்தலும்
நெஞ்சொடு மறுத்தலும் நாளெண்ணி
வருந்தலும்
ஏறு வரவுகண் டிரங்கி யுரைத்தலும்
பருவங்கண் டிரங்கலு முகிலொடு கூறலுந்
தேர்வரவு கூறலு மிளையரெதிர்
கோடலும்
உண்மகிழ்ந் துரைத்தலு மோதிய
விருபதும்
மாமதி நுதலாய் வான்பொருட்
பிரிவே.
|