பக்கம் எண் :
 
பொருளதிகாரம்378முத்துவீரியம்

என்பது, வாட்டங் கூறல், பிரிவு நினைவுரைத்தல், ஆற்றாது புலம்பல், ஆற்றாமை
கூறல், திணைபெயர்த் துரைத்தல், பொருத்த மறிந்துரைத்தல், பிரிந்தமை கூறல், இரவுறு
துயரத்திற் கிரங்கி யுரைத்தல், இகழ்ச்சி நினைந்தழிதல், உருவு வெளிப்பட்டு நிற்றல்,
நெஞ்சொடு நோதல், நெஞ்சொடு புலத்தல், நெஞ்சொடு மறுத்தல், நாளெண்ணி வருந்தல்,
ஏறுவரவு கண்டிரங்கி யுரைத்தல், பருவங் கண்டிரங்கல், முகிலொடு கூறல், தேர்வரவு
கூறல், இளையரெதிர் கோடல், உண்மகிழ்ந்துரைத்தல் ஆகிய இருபதும் பொருள் வயிற்
பிரிவாம்.

வாட்டங் கூறல்

என்பது, பொருள்வயிற் பிரியலுறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே
முற்றுப்பெறும் என்று யான் பொதுவகையாற் கூற, அக்குறிப்பறிந்து, கண்பனிவர,
இத்தன்மையளாய் வாடினாள், இனி யென்னாற் பிரிவுரைத்தலரிது, நீ யுணர்த்து
மாற்றானுணர்த்தெனத், தோழிக்குத் தலைமகளது வாட்டங் கூறல்.

(வ-று.)

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்றிருச் சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. (திருக். 332)

பிரிவு நினைவுரைத்தல்

என்பது, வாட்டங்கேட்ட தோழி, பொருளில்லாதார் இருமையின்கண் வருமின்பமு
மறியாரென வுட்கொண்டு, அருஞ் சுரம் போய், நமர் பொருள்தேட நினையா நின்றாரெனத்,
தலைமகளுக்குத் தலைமகன் பிரிவு நினைவுரைத்தல்.

(வ-று.)

வறியார் இருமை யறியார் எனமன்னு மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா அளவுநின் றோன்றில்லைச் சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. (திருக். 333)