பொருளதிகாரம் | 406 | முத்துவீரியம் |
முன்னிகழ்வுரைத்தூட றீர்த்தல்
என்பது, கலவியிடத் தூடிய
தலைமகளுக்கு, யாங்கொடிய நெறியைச் சென்று
சிறிய
வூரின்கண் மரையதட்பள்ளியினிச் செறிந்த மெல்லிய
முலைகளென் மார்பிடை
வந்தடர்க்கத் தங்கிய சிறிய துயிற்கு
மாறுகண்டிலம், அதனை நீ யுள்ளியுமறிதியோ வென,
முன்னிகழ் வுரைத்துத் தலைமகனவளை யூடறீரா நிற்றல்.
(வ-று.)
ஆறூர் சடைமுடி யம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென்
முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே. (திருக். 398)
பரத்தையைக் கண்டமை கூறிப்புலத்தல்
என்பது, முன்னிகழ்வுரைத்
தூடறீர்த் தின்புறப்புணரப்பட்ட தலைமகள், பிறர்க்கு
நீ யிவ்வாறின்பஞ் செய்தி யென்று கூற, நின்னை யொழிய யான்
வேறொருத்தியையுமறியே னென்ற தலைமகனுக்கு நின்பரத்தை
போகாநின்றவள் நம்
வாயிற்கணின்று தேருருட்டி விளையாடிய
புதல்வனைக் கண்டு நின்மகனென்றையுற்றுத்,
தழுவ,
நீ யையுறவேண்டா, அவன் உன் மகன், உறவு
மெய்யாகிய உறவே, ஈதும்
உனதில்லமே ஈண்டு
வருவாயாக வென்று யான் கூற, அது கேட்டுத் தானாணிப்போயினள்,
யான் அவளையறியேனாக, நீ மாயங் கூற வேண்டுவதில்லையென, நான்
பரத்தையைக்
கண்டமை கூறிப் பின்னுமவனொடு
புலத்தல்.
(வ-று.)
ஐயுற வாய்நம் மகன்கடைக்
கண்டுவண்
டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாமிதுன் னில்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. (திருக். 399)
ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல்
என்பது, பரத்தையைக் கண்டமை
கூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு,
இத்தன்மையன் யாவர்க்கு மூதிய மாகலின்,
அன்பானன்றியருளாற் பரத்தையர்க்குந்
தலையளி
செய்ய வேண்டுமன்றே, புறப்பெண்டீரைப் போல
யாமவனோடு புலக்கற்பாலே
|