யாப்பதிகாரம் | 408 | முத்துவீரியம் |
4. யாப்பதிகாரம்
உறுப்பியல்
தற்சிறப்புப்பாயிரம்
862. எலாந்தா மாக விருக்கும்
பொருளெது
அதனடி மலர்தொழு தறைகுவன் யாப்பே.
என்பது,
பிருதிவிமுதலிய ஐம்பெரும் பூதங்களும் அவற்றுட்
டோன்றிய
சராசரங்களுமாக இருக்கும்பொருள்
எதுவோ அப்பொருளின் அடியாகிய மலரை வணங்கி
யாப்பிலக்கணத்தைக் கூறுவேனென்க. (1)
நேரசை
863. நெடில்குறில் தனியா நின்றும்
ஒற்றெடுத்தும்
நடைபெறு நேரசை நால்வகை யானே.
என்பது, நெட்டெழுத்துத்
தனித்தும், குற்றெழுத்துத் தனித்தும், நெட்டெழுத்து
ஒற்றடுத்தும், குற்றெழுத்து
ஒற்றடுத்தும் வருவது நேரசை.
(வ-று.)
போதுசாந்தம் பொற்ப
ஏந்தி
ஆதிநாதற் சேர்வோர்
சோதிவானந் துன்னுவோரே. (2)
நிரையசை
864. குறிலிணை குறினெடில் தனித்தும்
ஒற்றடுத்தும்
நெறிமையி னான்காய் வருநிரை
யசையே.
என்பது, குறிலிணைந்து தனித்தும்,
குறிநெடில் இணைந்து தனித்தும், குறிலிணைந்து
ஒற்றடுத்தும், குறினெடில் இணைந்து ஒற்றடுத்தும்,
வருவது நிரையசை.
|