யாப்பதிகாரம் | 409 | முத்துவீரியம் |
(வ-று.)
அணிநிழ லசோகமர்ந் தருணெறி
நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப்பவரே. (3)
அகவற் குரிய சீர்கள்
865. நேர் நேர் தேமா நிரைநேர்
புளிமா
நிரை நிரை கருவிளம் நேர்நிரை
கூவிள
மாகு நாற்சீரு மகவற் குரிய.
என்பது,
நேரசையும் நேரசையும்
கூடினால் தேமா
நிரையசையும் நேரசையும் கூடினால்
புளிமா
நிரையசையும் நிரையசையும் கூடினால்
கருவிளம்
நேரசையும் நிரையசையும் கூடினால் கூவிளம்
ஆகிய நான்குசீரும் ஆசிரியப்பாவிற்குரியன.
(வ-று.)
குன்றக்குறவன் காதன்
மடமகள்
வரையர மகளிரைப் புரையுஞ்சாயலள்
ஐய ளரும்பிய முலையள்.
செய்ய வாயினள் மார்பினள்
சுணங்கே. (4)
வெண்பாவிற் குரிய சீர்கள்
866. ஈரசை நாற்சீர் ஈற்றினு
நேரசை
விளைந்துகா யெனவரல் வெண்பாக்
குரிய.
என்பது, இரண்டசையானாகிய
நாற்சீரினது இறுதியினும் நேரசையடைந்து,
தேமாங்காய்; புளிமாங்காய், கருவிளங்காய்,
கூவிளங்காயென மூன்றசையான் வருகிற
நான்குசீரும், வெண்பா விற்குரியன.
(வ-று.)
யாதானு நாடாமா லூராமா
லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
(குறள்.367) (5)
|