எழுத்ததிகாரம் | 44 | முத்துவீரியம் |
(வ-று.) சிவ + ஐக்கியம், =
சிவைக்கியம், மகா + ஐச்சுவரியம் = மகைச்சுவரியம்
எனவரும். (41)
இதுவுமது
156. அ, ஆ, விறுதிமுன், ஓ, ஒள வரினே
இருமையுங் கெடவௌ வெய்து மென்ப.
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், ஓகார ஒளகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழியிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஒளகாரம்
வரும்.
(வ-று) கலச + ஓதனம் =
கலசௌதனம். மந்திரா + ஒளடதம் = மந்திரௌடதம்
எனவரும். (42)
157. இ, ஏ, முதற்கை யாமென
மொழிப.
(இ-ள்.) மொழிமுதல் இகர
ஏகாரங்கள் ஐகாரமாகும்.
(வ-று.)
கிரியிலுள்ள=கைரிகம், வேரம்=வைரம். (43)
158. முதலில் உ, ஊ, ஓ, ஒளவா
கும்மே
(இ-ள்.) மொழிமுதல், உகர
ஊகார ஓகாரங்கள் ஒளகாரமாகும்.
(வ-று.)
குருகுலத்தார்=கௌரவர்; சூரன்மகள்=சௌரி; சோமன்
மகன்=சௌமியன். (44)
159. அகர முதன்மொழி ஆகார
மாகும்.
(இ-ள்.) முதன்மொழி அகரம்
ஆகாரமாகும்.
(வ-று.) சனகன்மகள்-சானகி
எனவரும். (45)
மொழியியல் முற்றும்.
இயல் உ - க்குச்
சூத்திரம் 161.
|