பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்47முத்துவீரியம்

பாம்பு பாம்பு, வந்தசாத்தன், வந்துபோனான், நடந்தான்சாத்தன், குழையினன் கொற்றன்
எனவரும். (7)

வேற்றுமை

167. ஐயொடு குவ்வின் னதுகண் வேற்றுமை.

(இ-ள்.) வேற்றுமைப் புணர்ச்சி ஐயும், ஒடுவும், குவ்வும், இன்னும், அதுவும்,
கண்ணுமென அறுவகையாம்.

(வ-று.) மரம்வெட்டினான், மகன்றந்தைவந்தான், சாத்தன் மகன், மலைவீழருவி,
தன்கை, குன்றக்குகை.

(வி-ரை.) ‘வேற்றுமை தானே விளியோ டெட்டே’ (சொல்-49) என மேற்கூறுவார்
எழுவாயும் விளியுமொழித்து ஈண்டு ஆறென்ற தென்னையெனின்:-பெயர்ப்பொருளை
வேற்றுமை செய்தலான் வேற்றுமை யெட்டென்பார், எழுவாய்க்கும் விளிக்கும் உருபு
பெயரும் பெயரது விகாரமுமன்றி வேறின்மையின் அவ்விரண்டினையுமொழித்துத் தமக்கென
உருபுடையன இடைநின்ற ஆறுவேற்றுமையுமே யாதலின், அவற்றின் உருபாறும் தொக்கும்
விரிந்தும் இடைநிற்க அவ்வாறோடும் பதங்கள் பொருந்தும் புணர்ச்சியை வேற்றுமைப்
புணர்ச்சி யென்றா ரென்க. (8)

ஏழு, நான்காம் வேற்றுமைகள்

168. ஏழு நான்குமொற் றிடைமிகு மென்ப.

(இ-ள்.) ஏழாம் வேற்றுமையும், நான்காம் வேற்றுமையும், வல்லொற்றிடையின்
மிக்குமுடியும்.

(வ-று.) மணி + கண், = மணிக்கண். மணி + கு, = மணிக்கு.

(வி-ரை.)

‘‘வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு
ஒல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும்’’

(தொல் - புணரி - 12) என்பது தொல்காப்பியம். (9)

ஆறாம் வேற்றுமை

169. ஆற னுருபி னகரமுனை கெடும்.

(இ-ள்.) ஆறாம்வேற்றுமை யுருபி னகரமுனை யழியும்.

(வ-று.) தம் + அது = தமது.