பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்48முத்துவீரியம்

(வி-ரை.)

‘‘ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்’’

(தொல் - புணரி - 13) என்பது தொல்காப்பியம். (10)

வேற்றுமையுருபுகள் வரும் இடம்

170. பெயர்க்குப் பின்வரும் வேற்றுமை யுருபே.

(இ-ள்.) வேற்றுமையுருபுகள் பெயர்கட்குப் பின்வரும்.

(வ-று.) நம்பியை, நம்பியொடு, நம்பிக்கு, நம்பியின், நம்பியது, நம்பிக்கண் எனவரும்.

(வி-ரை.)

‘‘வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே’’ (தொல்-புணரி.14)

‘‘பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே’’ (நன் - உருபு - 2)

என முன்னூல்களும் கூறும். (11)

திணையிரண்டு

171. உயர்திணை யஃறிணை யோரிரு வகையன.

(இ-ள்.) திணை, உயர்திணையும், அஃறிணையுமென விரு வகையனவாம்.

(வ-று.) உயர்திணை உயர்குலம், அஃறிணை இழிகுலம்.

(வி-ரை.) திணை என்பது நிலம், குலம், ஒழுக்கம் ஆகிய பொருளைக் குறிக்கும்.
அவற்றுள் ஈண்டுக் குலத்தினை யுணர்த்தி நின்றது என்றார் இவ்வுரையாசிரியர். சங்கர
நமச்சிவாயரும் இக்கருத்தினரே. திணை யென்பது ஒழுக்கம், அஃது ஆகுபெயராய்
ஒழுக்கத்தையுடைய பொருளை யுணர்த்தி நின்றது என்பர் நச்சினார்க்கினியர். இதுவே
பொருத்தம் உடையதாகும். ‘ஒழுக்கம் உடைமை குடிமை’ எனத் திருவள்ளுவர் கூறுதல்
இதற்கு அரணாகும். (12)

உயர்திணை அஃறிணை

172. அவற்றுள்,
     உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
    அஃறிணை யென்மனா ரவரல பிறவே.