பக்கம் எண் :
 
அணியதிகாரம்498முத்துவீரியம்

(வ-று.)

உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி
மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாதனம்
ஆதனத் திருந்த திருந்தொளி யறிவனை
அறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னி யமர்ந்த தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே. (3)

அடுக்கு மடக்கு

1132. அக்கர மொழியடி யாவ தடுக்கி
      வருவ தடுக்கு மடக்கா கும்மே.

என்பது, எழுத்தாவது, சொல்லாவது, அடியாவது அடுக்கி வருவது மடக்கணியாம்.

(வ-று.)

நா நா நா தங் கூடிசை நாடுந் தொழிலோவா
தா தா தார மாகவி ரைத்தண் மலர்மீதே
வா வா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே.
யா யா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்

எழுத்து மடக்கு.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

சொல் மடக்கு.

ஆடு நாகமு மத்திக ளும்வரை
ஆடு நாகமு மத்திகை யேபுனல்
ஓடு நாகமு முற்றிட லானதி
ஓடு நாகமு மேந்தியை யொத்ததே.

அடி மடக்கு. (4)

மடக்கு

1133. எழுத்தடி மொழியிடை யிட்டு மிடாமலும்
      மாறிமற் றொருபொருள் வந்து விளைவது
      மடக்கா மெனப்பெயர் வைக்கப் படுமே.