அணியதிகாரம் | 499 | முத்துவீரியம் |
என்பது, எழுத்துக்கள், அடிகளின்
சொற்கள், இடைவிட்டும், இடைவிடாமலும் மாறி,
வேறே யொருபொருள் வந்து தோன்றுவது
மடக்கணியாம். (5)
மடக்கு வருதற்குரிய அடிகள்
1134. அதுதான்,
ஓரடி முதலா நான்கடி காறுஞ்
சேரு மென்மனார் தெளிந்திசி
னோரே.
என்பது, அம்மடக்கு, ஓரடிமுதலாக
நான்கடியளவு நடக்கும்.
(வ-று.)
துறைவா துறைவார்
பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல்-சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்.
முதலடி மடக்கு.
கனிவா யிவள்புலம்பக் காலைநீ
நீங்கில்
இனியா ரினியா ரெமக்குப்-பனிநாள்
இருவராத் தாங்கு முயிரன்றி யெங்குண்
டொருவராத் தாங்கு முயிர்.
இரண்டாம் அடிமடக்கு.
தேங்கானன் முத்தலைக்குந்
தில்லைப் பெருந்தகைக்கு
ஓங்காரத் துட்பொருளா மொண்சுடர்க்கு-நீங்கா
மருளா மருளா தரித்துரைக்கு மாற்றம்
பொருளாம் புனைமா லையாம்.
மூன்றாமடி மடக்கு.
இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ
தோயுங்
கவள மதமான் கடத்திற்-றிவளு
மலையார் புனலருவி நீயணுகா நாளின்
மலையா மலையா நிலம்.
நான்காமடி மடக்கு. (6)
இரண்டடி மடக்கு
1135. அதன்வகை,
எழுவா யடியிரண் டிடையீ
ரடிமுதல்
|