பக்கம் எண் :
 
அணியதிகாரம்500முத்துவீரியம்

      அடிமூன் றாமடி யாதி யடியொடு
      நான்கா மடிகடை யீரடி யிரண்டடி
      நாலடி யினும்வரு நாடுங் காலே.

என்பது, முதலடிக் கண்ணும் இரண்டாமடிக் கண்ணும், நடுவிலிரண்டடிக் கண்ணும்,
முதலடிக் கண்ணும், மூன்றாமடிக் கண்ணும், முதலடிக் கண்ணும் நான்காமடிக் கண்ணும்,
இறுதியிரண்டடிக் கண்ணும், இரண்டாமடிக் கண்ணும் நான்காமடிக் கண்ணும் வரும்.

(வ-று.)

நினையா நினையா நிறைபோ யகலா
வினையா வினையா மிலமா-லனையாள்
குரவாருங் கூந்தற் குமுதவாய்க் கொம்பிற்
புரவாள நீபிரிந்த போது.

முதலடி இரண்டாமடி மடக்கு.

குரவார் குழலாள் குவிமென் முலைதாம்
விரவா விரவாமென் றென்ற-லுரவா
வரவா வரவா மெனநினையா வையம்
புரவாளர்க் கீதோ புகழ்.

நடுவிரண்டடி மடக்கு.

அடையா ரடையா ரரணழித்தற் கின்னல்
இடையாடு நெஞ்சமே யேழை-யுடையேர்
மயிலா மயிலா மதர் நெடுங்கண் மாற்றங்
குயிலாமென் றெண்ணல் குழைந்து.

முதலடி மூன்றாமடி மடக்கு.

மானவா மானவா நோக்கின் மதுகரஞ்சூழ்
கானவாங் கூந்தலெங் காரிகைக்குத்-தேனே
பொழியாரந் தார்மேலு நின்புயத்து மேலுங்
கழியா கழியா தரவு.

முதலடி நான்காமடி மடக்கு.

மாதருயிர் தாங்க வள்ளல்வரு நெறியிற்
பேதுறவு செய்யும் பெரும்பாந்தள்-யாதும்
வரையா வரையா மெனுமா மதமா
விரையா விரையா வெழும்.

இறுதி யிரண்டடி மடக்கு.