பக்கம் எண் :
 
அணியதிகாரம்501முத்துவீரியம்

மழையார் கொடைத்தடக்கை வாளபய னெங்கோன்
விழையார் விழையார்மெல் லாடை-குழையார்
தழையா முணவுங் கனியா மினமு
முழையா முழையா முறை. (7)

இரண்டாமடி நான்காமடி மடக்கு.

மூன்றடி மடக்கின் வகை

1136. எழுவா யடியொழித் தேனைய வடியினுங்
     கடையொழித் தேனைய காலினு மிரண்டாம்
     அடிதவிர்த் தேனைய வடியினு மூன்றாம்
     அடியொழித் தேனைய வடியினும் வருமே.

என்பது, முதலடி தவிர மற்றைய மூன்றடிக் கண்ணும், ஈற்றடி தவிர மற்றைய
மூன்றடிக் கண்ணும், இரண்டாமடி தவிர மற்றைய மூன்றடிக் கண்ணும், மூன்றாமடி தவிர
மற்றைய மூன்றடிக் கண்ணும் வரும்.

(வ-று.)

பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே
மாலைவாய் மாலைவா யின்னிசை-மேலுரை
மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ
காவலர் காவலராங் கால்.

முதலடி தவிர வேனைய மூன்றடி மடக்கு.

இறைவா விறைவால் வளைகாத் திருந்தியா
ருறைவா ருறைவார் புயலா-னறைவாய
வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக்
கண்டளவி னீர்பொழியுங் கண்.

ஈற்றடி தவிர வேனைய மூன்றடி மடக்கு.

கொடியார் கொடியார் மதின்மூன்றுங் கொன்ற
படியார் பனைத்தடக்கை நால்வாய்க்-கடியா
ருரியா ருரியா ரெமையாள வோதற்
கரியார் கரியார் களம்.

இரண்டாமடி தவிர வேனைய மூன்றடி மடக்கு.

மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயுங்
கலையுங் கலையுங் கடவுந், தொலைவி