அணியதிகாரம் | 502 | முத்துவீரியம் |
லமரி யெமக்கரணா மென்னுமவர்
முன்னிற்
குமரி குமரிமேற் கொண்டு.
மூன்றாமடி தவிர வேனைய மூன்றடி
மடக்கு. (8)
மடக்கின் சிறப்பு
1137. அடிதொறு மடங்குவ தாங்கதன்
சிறப்பே.
என்பது, நாலடிக்கண்ணு மடங்கி
வருவது, அம்மடக்கினது சிறப்பாகும்.
(வ-று.)
வரைய வரைய சுரஞ்சென்றார்
மாற்றம்
புரைய புரையவெனப் பொன்னே-யுரைய
னனைய நனைய தொடைநம்மை வேய்வர்
வினையர் வினையர் விரைந்து.
நாலடிக் கண்ணும் மடக்கு வந்தமை
காண்க. (9)
ஓரடி மடக்கின் வகை
1138. ஓரடிக் கண்ணொழு கியமடக்
கேழாம்
அவையடி யாதியு மந்தமு மிடையினும்
அடிமுத லிடையினுங் கடையினு முதலினும்
இடையினுங் கடையினு முதலிடை
கடையினு
மடங்கு மென்மனார் மறையுணர்ந்
தோரே.
என்பது, ஓரடிக்கண் நடக்கு மடக்கு,
ஏழுவகைப்படும். அவை, அடிமுதலினும், அடி
நடுவினும்,
அடி யிறுதியினும், முதல் இடையினும், முதல்
கடையினும், இடை
கடையினும், முதல் இடை
கடையினும் மடங்கி வரும்.
(வ-று.)
இளையா ரிளையா ருடனாய்
முலையின்
வளையா வளையா மனவேண் டுவமை
விளையா விளையாட் டயருந் தொழிறான்
தளையா தளையார் பொழிலின்
றடமே.
அடிமுதல் மடக்கு.
அளியாடு மரவங்கண்
மரவங்கண் மகிழ்ந்தானா
விளையாடு மாலந்த மாலந்தந் தாம்பிரிதும்
வளையார்த மகிழ்மான மகிழ்மான மலர்சோர
விளையாரை வெயினன்னை வெயினன்னை யிடமேவா.
அடிநடு மடக்கு.
|