இந்நூல் என்ன பெயர்த்தோ ? எனின், இந்நூல், எய்திய
சிறப்பின்
எழுத்தையும் சொல்லையும் மெய்தெரி வகையின் விளங்க நாடித், தேனிமிர்
பைம்பொழிற் றென்மயி லாபுரி, நீனிறக் கடவுள் நேமி நாதர்,
தந்திருப்பெயராற் செய்தமையான் நேமிநாதம் என்னும் பெயர்த்து.
இந்நூல் செய்தார் யாரோ ? எனின், உளமலி பேரரு ளுயிர்மிசை
வைத்த வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழாஅக்
குணவீரபண்டிதன் செய்தமைத்தான் என்பது.
இந்நூல் செய்தற்குக் காரணம் யாதோ ? எனின், விரிந்த
நூல்
உணரா மேதினியோர்க்குச் சுருங்கச் செய்தான், அந்நூல் தெரிவது
காரணமாக என்பது.
இந்நூலாற் பயன் யாதோ ? எனின், எழுத்தும் சொல்லும்
இயல்பு
உணராதோர் வழுத்தீர்விப்பது பயன் எனக் கொள்க.
இந்நூல் எவ்வளவினதாகச் செய்யப்பட்டதோ ? எனின்,
தொகுத்துச் செய்தலும், விரித்துச் செய்தலும், தொகை விரிப்படுத்துச்
செய்தலும், மொழிபெயர்த்துச் செய்தலும் என்பன. அவற்றுள் இந்நூல்
தொகுத்து உரைக்கப்பட்டது.
அற்றேல், இவ்வதிகாரம் என்னுதலிய எடுத்துக் கொள்ளப்பட்டதோ ?
எனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத்தின் பெயர் உரைப்பவே
விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ ? எனின், எழுத்ததிகாரம்
என்னும் பெயர்த்து, எழுத்திலக்கணம் உணர்த்தினமையான்.
எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினானோ ? எனின்,
எழுவகையான் உணர்த்தினான் என்பது. எழுவகையாவன : (1) எழுத்து
இனைத்து என்றலும், (2) இன்ன பெரியன என்றலும், (3) இன்ன முறையின
என்றலும், (4) இன்ன பிறப்பின என்றலும், (5) இன்ன மாத்திரையின
என்றலும், (6) இன்னவடிவின என்றலும், (7) இன்ன புணர்ச்சியின
என்றலுமாம். அவ்வேழும் இந்நூலுள்ளே கண்டுகொள்க.
எட்டுவகையும், எட்டிறந்த பல்வகையும் என்ன வேண்டுவாருமுளராக,
இந்நூலுடையார் எழுவகைய என்று சொல்லவேண்டிற்று என்னையோ ?
எனின், அவையெல்லாம் இவ்வேழினுள்ளே அடங்கும் ஆகலான் என்பது.
அன்றியும்,
|