மரபு வழு ஆவது: யானை மேய்ப்பானை இடையனென்றும். பசு
மேய்ப்பானைப்
பாகன் என்றும் சொல்லுதல்.
காலவழு ஆவது: செத்தானைச் சாம் என்றல், 1 குளம் நீர் புகுந்து
நிறைந்தது
எனற்பாலதனை நிறையும் என்றும் சொல்லுதல். நீர் புகுத
நிறையும் என்னாமையான் வழுவாயிற்று.
செப்புவழு ஆவது: கடம்பூர்க்கு வழி யாதோ? என்றால் இடம்பூணி
என்
ஆவின்கன்று என்றல்.
இடவழு ஆவது: உண்டேன் நீ, உண்டான் யான், உண்டேன் அவன்
என்பன.
இவ்வேழும் பிறழாமற் சொல்லுமாறு: உண்டான் அவன், உண்டாள்
அவள்,
உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை இவை திணையும்
பாலும் வழுவாது வந்தன.
நுந்நா டியாது என்றால், தமிழ் நாடு என்றல் வினாவாலுஞ் செப்பாலும்
வழுவாமல் வந்தது.
யாட்டுமறி, யானைக்கன்று என்பன மரபு வழுவாமல் வந்தன.
யான் உண்டேன், நீ உண்டாய், அவன் உண்டான் என்பன
இடமூன்றும்
வழுவாமல் வந்தன. பிறவும் அன்ன.
சினையும் முதலும் தம்மில் ஒவ்வாதனவற்றைப் பிறழ உவமிக்குமாறு:
சாத்தன் நல்லனோ? கொற்றன் றோள் நல்லவோ? என்றல், இது முதலுஞ்
சினையும் பிறழ உறழ்ந்தது.
சாத்தன்கண் நல்லவோ, கொற்றன் செவி நல்லவோ என்றல், இது
சினையும் சினையும் பிறழ உறழ்ந்தது.
நும்மூர் அரசன் நல்லனோ எம்மூர்க் கோலிக னல்லனோ என்றல்,
இது
முதலும் முதலும் பிறழ உறழ்ந்தது.
இவை சினையும் முதலும் தம்மில் ஒவ்வாத சொற்கள் வந்து பிறழ்ந்தன
கண்டுகொள்க.
இனிப் பிறழாது வருமாறு: கொற்றன் றோள் நல்லவோ? சாத்தன்
றோள் நல்லவோ? என்றால், கொற்றன் றோளிற் சாத்தன் றோள்நல்ல
சாத்தன் றோளிற்
கொற்றன் றோள் நல்ல என்றலும், எம்மூர் அரசன்
நல்லனோ? நும்மூர் அரசன் நல்லனோ?
என்றால்,
----------------------------------
1.
ஈண்டு 'என்றும்' என்றிருத்தல் வேண்டும்.
|