எம்மூர் அரசனினும் நும்மூர் அரசன் நல்லன், நும்மூர் அரசனினும் எம்மூர்
அரசன் நல்லன்
என்றலும் இவை வினாவாலும் விடையாலும் வழுவாமல்
வந்தன.
மேற்றா னிருந்த உயர்சினை கொன்றானிற்
றேற்றா வொழுக்கம் படுவகொன் -
மாற்றார்
உறுமுரண் சாய்த்தா னுயர்குடந்தை யாட்டி
சிறுமருங்குல் செற்ற முலை.
எனவும்,
உப்பக்க நோக்கி உபகேசி தோண்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப - விப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.
(திருவள்ளுமாலை, செ. 21)
எனவும்
நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டிப்
பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்டி ரடி.
எனவும் இவை பிறழ்வல்ல என வறிக.
உபகேசி ஆவாள், நப்பின்னைப் பிராட்டியார்
மாதாநுபங்கி
ஆவார், திருவள்ளுவதேவர்.
‘பகர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால்,
வினா ஐந்து
வகைப்படும்; அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல்,
அவனறிவு தான்கோடல், மெய்யவற்குக் காட்டல் என.
அவற்றுள், அறியான் வினாதல் என்பது இச்சூத்திரத்துக்குப்
பொருளென்னையோ? என்றல். அறிவொப்புக் காண்டல் என்பது இச்
சூத்திரத்துப் பொருள் யான் அறிந்தபடி அறிந்தானோ? வேறுபட
அறிந்தானோ? என வினாதல். ஐயமறுத்தல் என்பது இச் சூத்திரத்துக்குப்
பொருள் தெளியாது நின்றான் ஐயந்தீர வினாதல். அவனறிவு தான் கோடல்
என்பது இச் சூத்திரத்துக்குப் பொருள் இவன் உரைக்குமாறு காண்டும் என்று
வினாதல். மெய்யவற்குக் காட்டல் என்பது இச் சூத்திரத்துக்குப் பொருள்
வழுவ உணர்ந்தான் என்று அவனைப் பிழைப்புத் தெருட்டி,
நன்குணர்த்துவான் வினாதல் எனக் கொள்க. என்னை?
|