பக்கம் எண் :
 
68நேமி நாதம்

      இனி, யானைக்கோட்டை, யானைக்கோட்டொடு, யானைக் கோட்டிற்கு,
யானைக்கோட்டின், யானைக்கோட்டது, யானைக் கோட்டின்கண் என
உருபேற்றவாறு கண்டுகொள்க.

    
 பெயரி னாகிய தொகையுமா ருளவே
     யவ்வு முரிய வப்பா லான.      
          (தொல். வேற். 6)

    
 பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
     தொழினிலை யொட்டு மொன்றலங் கடை 
   (தொல். வேற். 9)

         
இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும்

1
8. ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
   எய்தும் குறிப்பும் இயலவரும் - தையலாய்
   ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்
   ஏனைக் கருவியுமாம் ஈங்கு.

    
எ - ன்: இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்:  ஐ என்பது இரண்டாம் வேற்றுமை; அது வினையையும்,
வினைக்குறிப்பையும் பற்றி வரும்; ஆன், ஆல், ஒடு என்பன மூன்றாம்
வேற்றுமை; அது வினைமுதலும் கருவிமுதலுமாய் வரும் எ - று.

     
வ - று: ஊரைக் காக்கும், அறத்தை நோக்கும், அரிசியை அளக்கும்,
அடைக்காயை எண்ணும் இவை வினை. 1 குழையையுடையன், பொருளை
இலன் இவை வினைக்குறிப்பு. 2 பிறவும் அன்ன.

     ஆல் - தச்சனாற் செய்யப்பட்டது சிறுமா வையம் கபிலராற்
பாடப்பட்டது கவி;  இவை வினைமுதல்.  ஆன் - வாணிகத்தான்
ஆயினான், காணத்தாற் கொண்ட அரிசி; இவை கருவிமுதல்,

     இனி, ஒடு -  புலியொடு பொருத புன்கண்கூர் யானை .  நெய்யொடு
விராய குய்யுடை யடிசில்  எனக் கொள்க. ஆல் என்னும் உருபு ஆனாய்த்
திரிந்தது ஒக்கும். பிறவும் அன்ன. (3)
--------------------------------
1. 2. ஈண்டு வினை என்றது தெரிநிலைவினையை எனவும், வினைக்
குறிப்பு என்றது குறிப்புவினையை எனவும் கொள்க. பின்னும் வினை,
வினைக்குறிப்பு என வருவனவற்றையும் இங்ஙனமே கொள்க.