பக்கம் எண் :
 
எழுத்திலக்கணம்012
எழுத்துகளின் தொகையை இவ்வாறு முடித்து இவ்வுட் பிரிவின் இறுதி நூற்பாவில் வகைகளைக் கூறத் தோற்றுவாய் செய்து கொள்கிறார்.
(5)
6.உருவும் ஓசையும் உணராற்கு ஒருநூற்
 பயனும் எய்தாப் பண்புநன்கு உணர்ந்தும்
 தொடங்கிய துறைக்காச் சொல்முறை முன்பின்
 பிறழா வண்ணம் பேசுதும் பிரித்தே.
எழுத்துகளின் வரி, ஒலி வடிவங்களை அறிய மாட்டாதாற்கு எந்த இலக்கணமும் பயன்தராது என்னும் உண்மையை யாம் தெளிவாக அறிந்துளோமாயினும் அவற்றின் இலக்கணம் கூறுவான் புக்கதால் முன் உரைத்த முறை பிறழாதே அவற்றை வகைப்படுத்திக் கூறுவாம் என்றவாறு.
எழுத்தின் வடிவங்களை அறியாதவன் அவற்றானியன்ற நூல்களைக் கற்றுப் பயனடைதல் ஏலாது; அங்ஙனமின்றிக் கற்றோனுக்கு எழுத்தின் வரி, ஒலி வடிவங்களைக் கூறல் மிகை. எனவே இவ்விரு காரணங்களானும் எழுத்துகளின் வரி. ஒலி வடிவு பற்றி நூல் செய்தல் பயனற்றதே. இது பற்றியே சிவஞான முனிவரும், “சொல்லதிகாரம் போலப் பெரும்பயன் படாமை கருதி எழுத்திற்கு உரை செய்யாதொழிந்தமையின்”1 என்றார்.
வரிவடிவம் அறிந்தவனே கற்க முடியும்; கற்றவனே வரி வடிவம் அறிவான் என்றால் ஒன்றினை ஒன்று பற்றுதல் என்னுங் குற்றம் தோன்றுகிறது. எனினும் இலக்கணச் செய்கை கட்கு ஒரோவிடங்களில் இன்றியமையாததாயிருப்பதாலும், ஒன்றைக் கூறத்தொடங்கிய பிறகு அதனோடு தொடர்புடையனவற்றைக் கூறலே முறையாதலாலும் கூறுவேன் என்றாராயிற்று.
ஒரு நூற்பயனும் எய்தாஎன்புழி உம்மையை ஒன்றிற்கு மாற்றுக. சொல்முறை முறை முன்பின் பிறழா வண்ணம் என்பதை இரட்டுற மொழிதலாக்கி, முன் பாயிரத்தே