பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்013
“எழுத்து சொற்பொருள் யாப்பணிஎனத்திகழ்
 இவற்றுடன் இவைதம்மாற்
 பழுத்து மாமணம் கமழ்தரு புல
 பகர்வது குறித்துள்ளேன்”1
எனக் கூறியது பின்னர் இவ்விடத்திற் பிறழா வண்ணம் எனவும், உயிர் முதலாகக் கூறப்பட்ட வரிசைமுறை தப்பாது எனவுங் கொள்க. அற்றேல் இங்கு முறை பிறழாது கூறுவேன் என்பதற்குத் தக்க காரணமின்மை அறிக. உணர்த்தும் என்ற உம்மையும், “முற்கூறியசொல் பிறழா வண்ணம் பேசவேண்டிய கடப்பாடுடையேனாதலின் பேசுதும்” என்பதற்கே வந்தது. இது நுதலிப்புகுதல்.
(6)
தொகை முற்றிற்று
2. வகை
இப்பிரிவில் எழுத்துகளின் வரிவடிவம், ஒலி, உச்சரிப்பு முயற்சி என்பன கூறப்படும். இப்பிரிவு உயிர்எழுத்து, ஆய்த எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, அலகெழுத்து, கூட்டெழுத்து, குறிப்பெழுத்து, புரையெழுத்து, அறியுங்குறிப்பு என ஒன்பது சிறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. உயிர் எழுத்து
நிறுத்த முறையானே முதற்கண் உயிர் எழுத்துகளைப் பற்றிய சூத்திரம் கூறத்தொடங்கி முதல் நூற்பாவில் அகர ஆகாரங்களை எடுத்துக்கொள்கிறார்.
7.கிளிமுகம் போலச் சுழித்துக் கீழ்க்கொணர்ந்து
 இடப்பால் நீட்டி மேல்வளைத்து இடைவெளி
 அமைதர வலத்துஈர்த்து அம்முகம் அடங்க
 மேல்ஈர்த்து அம்முறை கீழும் ஈர்த்தல்